Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாமிகப்பெரிய பொருட்செலவில் தயாராக உள்ள சியான் 61வது திரைப்படத்தின் கதை களம் இதுதான் - சுட...

மிகப்பெரிய பொருட்செலவில் தயாராக உள்ள சியான் 61வது திரைப்படத்தின் கதை களம் இதுதான் – சுட சுட வெளிவந்த ரகசிய அப்டேட்

சியான் விக்ரம் தன்னுடைய கம் பேக்கை மகான் திரைப்படத்திலும் பா ரஞ்சித் தன்னுடைய கம் பேக்கை சார்பட்டா பரம்பரை திரைப்படத்திலும் கொடுத்தனர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படம், மணிரத்தினம் இயக்கி வெளிவர தயாராக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் இறுதி கட்டத்தை நோக்கி வெளியாகதயாராகிக் கொண்டிருக்கின்றன.

- Advertisement -

மறுபக்கம் பா ரஞ்சித் இயக்குனர் கமலஹாசனை வைத்து திரைப்படம் ஒன்றை எடுக்க போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். கமல்ஹாசன் உடன் ஒரு திரைப்படம் அதேபோல ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவிருக்கும் ஒரு திரைப்படத்தையும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் சியான் 61

- Advertisement -

விக்ரமின் 61வது திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில்,பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள செய்தி நமக்கு முன்பே கிடைத்தது. இதை அதிகாரப்பூர்வமாக இவர்கள் மூவரும் ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.

- Advertisement -

தற்போது கிடைத்துள்ள அப்டேட் படி ஜூலை மாதம் 15ம் தேதி முதல் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் சுமார் ஆறு மாத காலம் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசை அமைக்கப் போவதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

பீரியடிக் சண்டை படமாக இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராக உள்ளது தான் நமக்கு கிடைத்துள்ள முக்கிய தகவல். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு அல்லது 2024 ஆம் ஆண்டு வெளிவர வாய்ப்பு உள்ளதாகவும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

Most Popular