சினிமா

“இதுவும் கடந்து போகும்” நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சமந்தா! – குணமாக தாமதமாகிறது என ட்விட்டரில் உருக்கமான பதிவு!

நடிகை சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து யசோதா, குஷி, சாகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள யசோதா நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. யசோதா படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் “சூர்யா” வெளியிட்டுள்ளார். அதேபோல் மலையாளத்தில் “துல்கர் சல்மானும்” தெலுங்கில் “விஜய தேவரகோண்டாவும்” கன்னடத்தில் “ராக்ஷித் செட்டி” இந்தியில் “வருன் தவான்” ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

ஹரிஷ் நாராயண், கே ஹரி சங்கர் இருவரும் இணைந்து இயக்கியுள்ள யசோதா, பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தற்போது வெளியான ட்ரெய்லரில் படத்தின் கதை குறித்து சில லீட் கிடைத்துள்ளது.

அதன்படி கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சமந்தா பணத்திற்காக வாடகை தாயாக சம்பாதிக்கிறார். அப்போது அங்கே நடக்கும் பிரச்சனைகளில் இருந்து சமந்தா தப்பிப்பாரா? இல்லையா? என்பதே கதையாக இருக்கும் என தெரிகிறது.

Advertisement

சமந்தா, கர்ப்பிணி ஆகவும் அதே நேரம் ஆக்ஷனில் அதிரடியாக மிரட்டும் கேரக்டரிலும் நடித்துள்ளார். முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் சமந்தாவின் வேகம் சிலிர்க்க வைக்கிறது. பணத்திற்காக வாடகை தாயாக செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசுகிறதா? என ட்ரெய்லர் பார்த்ததும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் “யசோதா படத்திற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்ததற்கும்” , “மக்கள் அதிக அளவு இந்த ட்ரெய்லரை விரும்பியதும்” தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, “ரசிகர்கள் எப்போதும் இந்த அன்பையும் சப்போட்டையும் தரும்போது அது எனக்கு பெரிய பலமாக உள்ளது.” என்றார்.

Advertisement

சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு ஆட்டோ இம்மினோ மயோசிட்டிஸ் எனும் தசைப்பிடிப்பு நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதாகவும், உடல் அளவிலும் மனதளவிலும் கஷ்டப்பட்டதாகவும் இதனை இச்சமயத்தில் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் இருந்து இன்னும் தான் முழுமையாக குணமடையவில்லை எனவும் சமந்தா ட்வீட் செய்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top