Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்த வாரம்  ஓடிடியில் ரிலீசாகும்  திரைப்படங்கள்..!

இந்த வாரம்  ஓடிடியில் ரிலீசாகும்  திரைப்படங்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்கில் திரைப்படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ ott தளங்களில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதம் போல் அமைந்திருக்கும் இந்த ஓடிடியின் மூலம் பல திரைப்படங்கள் காப்பாற்றப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் வரும் ஜூலை 7ஆம் தேதி எந்தெந்த திரைப்படங்கள் எந்த தளங்களில் ரிலீஸ் ஆகிறது என்பதை தற்போது பார்க்கலாம். கடந்த மூன்று வாரமாக இப்போது வரும் அப்போது வரும் என்று பாவாளா காட்டி வந்த பர்ஹானா திரைப்படம் ஜூலை 7ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

இதேபோன்று சித்தார்த் நடித்த டக்கர் திரைப்படம் ஏழாம் தேதி நெட்ஃபிக்ஸில் ரிலீஸ் ஆகிறது.
இதேபோன்று காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படம் ஜீ பை இல் வரும் ஏழாம் தேதி ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

இதேபோன்று 65 மூவி என்ற ஆங்கிலத் திரைப்படமும் தி போப் எக்ஸாரிஸ்ட் என்ற திகில் ஆங்கில திரைப்படமும் நெட்பிளிக்சில் ரிலீஸ் ஆக உள்ளது. Blind என்ற ஹிந்தி வெப் சீரிஸ் ஜியோ சினிமாவில் ரிலீசாகிறது.

- Advertisement -

இதேபோன்று அவுட் கிளாஸ் என்ற திரைப்படமும் நெட்பிளிக்ஸ் ஆகிறது. இதேபோன்று மார்வல் திரைப்படமான கார்டியன் ஆஃப் த கேலக்ஸி என்ற திரைப்படமும் ஹாட் ஸ்டாரில் வரும் ஏழாம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ரிலீசாகிறது.

ஸ்வீட் காரம் காபி என்ற தமிழ் வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வரும் ஏழாம் தேதி வருகிறது. இதேபோன்று ஆதுரா என்ற வெப் சீரிஸும் அமேசான் பிரைமில் வெளிவர இருக்கிறது 3.33 என்ற திரைப்படம் ஆகா தமிழில் வரும் ஏழாம் தேதி வருகிறது.

கோல்ட் பிரிக் என்ற பிரெஞ்சு திரைப்படம் நெட் ஃப்ரீக்ஸிலும் ஜாய்லேண்ட் என்ற பாகிஸ்தான் திரைப்படம் புக் மை ஷோவிலும் ரீலிசாக இருக்கிறது. உணாத் என்ற மராத்தி திரைப்படம் ஜியோ சினிமாவில் வரவிருக்குறது.

Most Popular