Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாசென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது - விஜய் ரசிகர்களுக்கு டுவிஸ்ட் ! துணிவு & வாரிசு படத்தின்...

சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது – விஜய் ரசிகர்களுக்கு டுவிஸ்ட் ! துணிவு & வாரிசு படத்தின் மொத்த நேரம் இதுதான் !

கோலிவுட்டின் மிகப் பெரிய மோதல் இன்னும் 2 வாரத்தில் பொங்கலுக்கு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து முன் வேலைகளும் முழு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் வாரிசு படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகின. துணிவு படத்தில் மொத்தமே மூன்று பாடல்கள், அந்த மூன்றும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

- Advertisement -

பாடல்கள் அனைத்தும் முடிந்த நிலையில் அடுத்த புரொமோஷனாக இரு படக் குழுவினரும் டிரெய்லர் பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். வாரிசு படத்தின் டிரெய்லர் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரிசு இசை வெளியீட்டு விழா அன்று மாலை 6:30 மணிக்கு ஒலிபரப்பாவதால், டிரெய்லர் 6 மணிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவு படத்தின் டிரெய்லர் அதற்கு முந்தைய நாள் டிசம்பர் 31ஆம் தேதி மாலை வெளியாகும் எனவும், டிரெய்லரை பார்த்து அனைவரும் வியந்து போய்யுள்ளதாகவும் கூறுகின்றனர். இறுதி டிரெய்லர் கட்டை ஜி ஸ்டுடியோவிடம் ஒப்படைத்து விட்டனர். இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். படத்தின் ரிலீஸ் தேதி டிரைலரில் குறிப்பிடப்படும். 11ஆம் தேதியா 12ஆம் தேதியா என்ற குழப்பம் 2 நாட்களில் தீர்ந்து விடும்.

- Advertisement -

படத்தின் எடிட்டிங் வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் சென்சார் போர்டு சான்றிதழும் அளிக்கப்பட்டுள்ளது. துணிவு படத்தின் நேரம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஆகும். முந்தைய வலிமை படம் 3 மணி நேரத்துக்கு அருகில் இருந்ததால் பின்னர் பார்வையாளர்களின் எதிர்ப்பை தொடர்ந்து 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இம்முறை அதுபோல் எந்த வித தவறும் நடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்.

- Advertisement -

மேலும், துணிவு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான். மறுபக்கம் வாரிசு படத்தின் ரன் டைம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. தோராயமாக 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். குடும்பப் படம் என ஏற்கனவே தெரிந்துவிட்டதால் நிச்சயம் யு சான்றிதழ் தான் கிடைக்கும்.

Most Popular