Tuesday, March 19, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு அப்டேட்: படக்குழுவினர் கொடுத்துள்ள இன்ப அதிர்ச்சி!

துணிவு அப்டேட்: படக்குழுவினர் கொடுத்துள்ள இன்ப அதிர்ச்சி!

நடிகர் அஜித்குமாரின் 61 வது திரைப்படமான துணிவு 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஹச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய மூவர் கூட்டணியில் வலிமை, நேர்கொண்ட பார்வை, ஆகிய படங்கள் வெளிவந்தன. வலிமை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணியில் வெளிவர இருக்கும் படம் துணிவு. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது . துணிவு திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் ஆகிய இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியார், நடிகர் ஜான் கொகென், வீரா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

பொங்கல் விருந்தாக துணிவு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் “ரெட் ஜெயன்ட்” மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

துணிவு படத்தின் முதல் பாடல் “அனிருத்” பாடியுள்ளதாகவும் மேலும் முதல் பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் ஆடி உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதற்கு முன்பு அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, விசுவாசம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் “கல்யாண்” மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.

ஆலுமா டோலுமா, அடிச்சு தூக்கு ஆகிய பாடல்கள் அஜித் மற்றும் கல்யாணம்” காம்போவில் ஹிட் ஆகியுள்ளது. துணிவு படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் மாதம் வெளியாகும் என முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular