கடந்த ஜனவரி 11ஆம் தேதி இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. எல்லா தல அஜித் திரைப்படங்களைப் போல இந்த திரைப்படம் சாதாரணமான முறையில் வெளியிடப்படவில்லை .
சற்று சுவாரசியமான முறையில் தல அஜித் நடித்த துணிவு திரைப்படத்தோடு அதே நாளன்று தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ஒன்றோடு ஒன்று மோத விடப்பட்டது.
இந்தத் திரைப்படங்களில் நடித்த நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய் மட்டும் போட்டியிடவில்லை. இந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என்று மொத்த படக்குழுவினர்களுமே நீயா நானா என்ற போட்டியில் மிக சுவாரஸ்யமாக வெளியிடப்பட்டது.
இவர்களை போட்டியில் பங்கெடுக்கும் பொழுது தல தளபதி ரசிகர்கள் வேடிக்கை பார்ப்பார்களா என்ன அவர்களும் களத்தில் இறங்கி போட்டியில் கலந்து கொண்டு மோதினார்கள். இதில் பிரச்சனை நிறுவனம் தல அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்காக நிறைய ஸ்கிரீன்களில் லாக் செய்து வைத்திருந்தது. இவற்றால் கூட வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜ் கோரிக்கை வைத்திருந்தார். இருப்பினும் வாரிசு திரைப்படத்திற்கு குறைவான ஸ்கிரீன்கள் தான் கிடைத்தது அந்த நிலையிலும் வாரிசு திரைப்படம் வெற்றி அடைந்தது.
ஆனால் துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது பிப்ரவரி 3ஆம் தேதி ரன் பேபி ரன், மைக்கேல் போன்ற படங்கள் ரிலீஸ் ஆனதால்,வாரிசு திரைப்படத்தை ஒப்பிடுகையில் துணிவு திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் கூட்டம் இல்லாததால் தூக்கப்பட்டது.
மேலும் ஹெச்.டி. பிரிண்டில் துணிவு திரைப்படம் ஆன்லைனில் வெளியாகி விட்டது. இதனால் ஓடிடியில் திட்டமிட்ட தேதிக்கு முன்பே வெளியிட இருக்கிறார்கள். வருகின்ற பிப்ரவரி எட்டாம் தேதி netflix வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்துள்ளது .இவற்றால் மிகுந்த ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் தல ரசிகர்கள் காத்திருக்கிறார்.