Featured

யுவன் – நா.முத்துகுமார் ஜோடியில் வெளிவந்த பாடல்களில் ரசிகர்களைக் கவர்ந்த டாப் 10 பாடல்கள்

Yuvan and Na Muthukumar

நா.முத்துகுமார் என்பவர் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய அங்கமாக விளங்குகிறார். தலைசிறந்த பாடலாசிரியரான இவர் சிறந்த எழுத்தாளரும் கூட. அஜித்குமார் நடித்த “ கிரீடம் ” படத்திற்காக முதலில் வசனம் எழுதினார். அதுமட்டுமில்லாமல் பல புத்தகங்களும் எழுதியுள்ளார். மனித வாழ்க்கையையும் உணர்வையும் இரண்டடி வரிகளில் புரியவைக்கும் மாபெரும் கலைஞன் திரதிஷ்டவசமாக இவ்வுலகில் இருந்து விரைவில் நீங்கினார். 2016ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் நம்மை நம்மை விட்டு பிரிந்து சென்றார். நா.முத்துகுமார் அவர்கள் இன்று நம்முடன் இல்லையென்றாலும் அவர் நமக்காக விட்டுச் சென்ற வார்த்தைகள் காலங்கள் கடந்து என்றும் உயிர்வாழும்.

யுவனும் முத்துக்குமாரும் மிகச் சிறந்த நண்பர்கள். யுவன் ஷாங்கர் ராஜாவின் இசைக்கு இவரது வரிகள் உயிர் கொடுத்தன. முத்துகுமார் இல்லாமல் யுவன் ஷங்கர் ராஜா சிறந்த பாடல்களைத் தர தடுமாருவதை நம்மால் உணர முடிகிறது. தமிழ் திரையுலகின் மாபெரும் வெற்றிக்கண்ட கூட்டணிகளில் ஒன்று யுவன் – நா முத்துகுமார் ஜோடி. இந்தக் காம்போ நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை நமக்கு அளித்துள்ளது. அதில் ரசிகர்களைக் கவர்ந்த மற்றும் அதிக கேட்கப்பட்ட டாப் 10 பாடல்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Advertisement

10.ஒரு பார்வையில் – சிவா மனசுல சக்தி

கதாநாயகன் மேல் வைத்திருக்கும் காதலை வெளிக்காட்டாமல் அவனுடன் சண்டைப் போட்டு கோபத்தில் அவனுக்காக எழுதிய காதல் கடிதங்களை வீட்டின் ஜன்னல் வழியாக தூக்கி எரிவதை கதாநாயகன் ஜீவா கைபற்றுகிறார். காதலன் காதலி மேல் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் இந்த அற்புதமான பாடல் ஒரு நிமிடம் என்றாலும் ஓராயிரம் முறை கேட்ட வைக்கும்.

9.ஆனந்த யாழை – தங்க மீன்கள்

ராம் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான தங்க மீன்கள் திரைப்படம் பல விருதுகளை அள்ளிச் சென்றது. இப்படத்தில் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் ‘ ஆனந்த யாழை ‘ பாடலுக்காக நா.முத்துகுமார் தேசிய விருதைத் தட்டிச் சென்றார்.

Advertisement

8.உன் பதில் வேண்டி – தரமணி

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான மற்றொரு திரைப்படம் தரமணி. யுவன் ஷங்கர் ராஜா அவரது ரசிகர்களை கடைசியாக திருப்திப் படுத்திய ஆல்பம் இது தான். கடலில் பயணம் செய்யும் போது வரும் ‘ உன் பதில் வேண்டி ‘ பாடல் ரசிகர்களின் விருப்பமான பாடலாக உள்ளது. இந்தப் பாடலை சித்தார்த் மிக அற்புதமாக பாடியிருப்பார். அதற்கடுத்து அதே படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ யாரோ உச்சிக்கிளை மேலே ‘ எனும் மற்றொரு பாடல் மனதை உருக்கும்.

7.தெய்வம் வாழ்வது எங்கே – வானம்

வானம் திரைப்படத்தின் உயிர் மூச்சாக விளங்கும் பாடல் இது. இந்தப் பாடலில் வரும் வரிகள் மனித வாழ்க்கையைப் பற்றி தெளிவாக உணர்த்துகிறது. “ அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் காதல்தான். ” மற்றும் “ தனக்காக வாழ்வதா வாழ்க்கை. ” வரிகள் ரசிகர்களின் ஃபேவரட்.

6.கண் பேசும் வார்த்தைகள் – 7ஜி ரெயின்போ காலனி

செல்வராகவன் படைத்த மாபெரும் படைப்புகளில் ஒன்றான சிறந்த திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஃபிலிம்பேர் விருது வென்றார். இந்தப் பாடல் மூலம் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய வலியை கதாநாயகிக்கு எடுத்துக் கூறுகிறார் கதாநாயகன்.

5.ஆராரோ – ஆதலால் காதல் செய்வீர்

கல்யாணத்திற்கு முன் கர்ப்பமாகும் பெண்ணை அவனுடைய காதனலுடன் சேர விடாமல் தடுக்கின்றனர். அவர்களுக்கு பிறந்த குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்க்கிறார்கள். பெற்றோர் உயிருடன் இருந்தும் அங்கு அந்தப் பச்சிளம் குழந்தை அனுபவிக்கும் வேதனைகளை உணர்ச்சிப்பூர்வமான குரலில் யுவன் பாடினார். இந்தப் பாடலைக் கேட்டால் கல் நெஞ்சம் கொண்டவர்கள் கூட கரைந்து விடுவார்கள்.

4.போகாதே – தீபாவளி

தீபாவளி படத்தில் அமைந்திருக்கும் ‘ போகாதே ‘ பாடலில் தன்னை விட்டுச் சென்ற காதலியை நோக்கி கதாநாயகன் பாடுகிறார். “ கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும் ! அது போல தானே உந்தன் காதல் எனக்கும் ! நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு ? நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு ! ” எனும் வரிகள் காதல் தோல்வி அடைந்த பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டசாக உலா வருகிறது.

3.காதல் வளர்த்தேன் – மன்மதன்

சிம்புவின் சிறந்த படங்களில் முதன்மையாகவும் ரசிகர்களின் விருப்பமான படமாகவும் மன்மதன் விளங்குகிறது. ‘ காதல் வளர்த்தேன் ‘ பாடல் மொத்தம் 7 நிமிடங்கள். இதை ஏழுத்திட்ட நா.முத்துகுமார் அவர்களும் அதைப் பாடிய கே.கே அவர்களும் இன்று நம்முடன் இல்லை என்பது இந்தப் பாடல் கேட்பதை விட சோகமலிக்கிறதது.

2.பற பற பட்டாம்பூச்சி – கற்றது தமிழ்

இயக்குனர் ராம் அவர்களின் முதல் திரைப்படம் கற்றது தமிழ். படத்திற்கு இசையால் உயிர் கொடுத்தவர் யுவன். அந்த இசைக்கு தன் வரிகள் மூலம் உயிர் கொடுத்தவர் நா.முத்துகுமார். இதில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் மிக அற்புதமாக இருக்கும். அதில் சிறந்தது என்றால் ‘ பற பற பட்டாம்பூச்சி ‘ தான். “ தன்னன்தனி ஆள் என்று யாரும் இல்லை என்று உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே ! ” என்ற வரிகள் படத்திற்கு மட்டுமல்ல நிஜ வாழ்கைக்கு ஊக்கமளிக்கிறது.

1.ஒரு நாளில் – புதுப்பேட்டை

யுவன் – நா.முத்துகுமார் ஜோடியில் வெளியான பாடல்களில் எது மிகவும் பிடித்தது என்று கேட்டால், புதுப்பேட்டையில் வரும் ஒரு நாளில் பாடலைத் தான் பெரும்பாலானோர் தேர்வு செய்வர். இந்தப் பாடல் பற்றி நா.முத்துகுமார் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ வாழ்கையில் எந்த சோகமும் ஒரு நாள் தான். முதல் நாள் ஆழமாக இருக்கும். அடுத்த நாள் அந்த சோகத்தின் அடர்த்திக் குறையும். போகப் போக அந்த சோகம் மறைந்துவிடும் ! ”. வாழ்கையில் வீழ்ந்து கிடக்கும் மனிதனுக்கு புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கும் இந்த பாடலை தன் ஈரமான குரலால் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே பாடினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top