Featured

இது கௌதம் மேனன் 2.0.. ! பெரிய பட்ஜெட்டில் தயாராகும் பான் இந்தியா படம்.. !

GVM Abishek Bachchan

கோலிவுட்டின் சிறப்புமிக்க இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். காதல் படங்களுக்கு பெயர்போன இவர் கிளாஸியான இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ளார். சிறந்த உதாரணங்கள் வேட்டையாடு விளையாடு கமல், என்னை அறிந்தால் அஜித் மற்றும் சில கதாபாத்திரங்கள்.

தொடர்ந்து படங்கள் இயக்கி வந்த இவர் நடுவில் பொருளாதார நெருக்கடியால் மிகவும் அவதிப்பட்டுவிட்டார். தனுஷ், மேகா ஆக்காஷை வைத்து உருவாக்கிய ‘ என்னை நோக்கிப் பாயும் தோட்டா ’ படத்தை வெளியிடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இறுதியில் வேல்ஸ் நிறுவனம் உதவியால் வெளியிடப்பட்ட படம் மெகா ஃப்ளாப் ஆகியது.

Advertisement

அவரது கையில் இன்னும் விக்ரம் நடித்த ‘ துருவ நட்சத்திரம் ’ படம் இருக்கிறது. அதன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருட இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த 2 வருடங்களாக பொருளாதார பிரச்சினைகளில் இருந்து சற்று விலகி இருக்கும் இயக்குனர் கௌதம் மேனன் புதிய கதைகளில் தன் கவனத்தைச் செய்துத்தி வருகிறார்.

சென்ற ஆண்டு சிலம்பரசனை வைத்து இயக்கிய ‘ வெந்து தணிந்தது காடு ’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடையவில்லை என்றாலும் சுமாராக இருந்தது. கௌதம் மேனன் இயக்குனர் வேலைக்கு இடையில் நடிப்படிலும் கவனம் செலுத்துகிறார், விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தன் பங்கைக் கொடுத்து வருகின்றார்.

Advertisement

கௌதம் வாசுதேவ் மேனனிடம் புதிய படம்

இயக்குனராக வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் பாக்கி உள்ளது. அது வெளியாவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் போல. தற்போது கௌதம் மேனன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சனை வைத்து ஒரு பெரிய பான் இந்தியா படம் திட்டமிட்டுள்ளார். பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது.

அண்மையில் பர்ஸீ வெப் சீரிஸ் மூலம் பாலிவுட்டில் களம் பதித்த விஜய் சேதுபதி வருகின்றனர் ஜூன் மாதம் ஷாருக் கானுடன் இணைந்து நடித்ததை ஜவானில் நாம் காணவிருக்கிறோம். இதோடு அவரது பயணம் முடியாமல் கௌதம் மேனன் படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணையவிருக்கிறார். சமீபத்தில் பெரிய படங்கள் இல்லாத அபிஷேக் பச்சன், விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனனுக்கு தற்போது பேச்சில் இருக்கும் இப்படம் பெரிய பிராஜெக்ட்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top