Saturday, April 27, 2024
- Advertisement -
HomeUncategorizedஇந்திய வரலாற்றில் டாப் 250 திரைப்படங்கள் எவை? ஆதிக்கம் செலுத்திய தமிழ் படங்கள்

இந்திய வரலாற்றில் டாப் 250 திரைப்படங்கள் எவை? ஆதிக்கம் செலுத்திய தமிழ் படங்கள்

ஐ எம் டி பி என்ற இணையதளம் என்பது உலக திரைப்படங்கள் அனைத்தைப் பற்றிய தகவல்களையும் பதிவிடும் இணையமாகும். இந்த இணையத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.திரைப்படம் பார்க்கும் இணையத்திலேயே ஐ எம் டி பி உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த தளத்தில் அதிக மதிப்பெண்களை பெரும் பணங்களை தான் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் அந்த அளவிற்கு நம்பகத்தன்மை உடைய இணையதளமாக இது இருக்கிறது.

- Advertisement -

இந்த நிறுவனம் தற்பொழுது ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதிலும் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்த 250
திரைப்படங்களை வரிசைப்படுத்தி வெளியிட்டு இருக்கிறது. அதில் முதல் 10 திரைப்படங்கள் இந்தத் திரைப்பட பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது 1993 ஆம் ஆண்டில் வெளிவந்த இராமாயணம் என்ற திரைப்படம் ஆகும்.

இதைத் தொடர்ந்து 1987 இல் வெளிவந்த கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.இந்தத் திரைப்படத்தில் அடுத்த தமிழ் படம் என்றால் 2022 நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி திரைப்படம் நான்காம் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு கமல் மற்றும் மாதவன் நடிப்பில் வெளிவந்த அன்பே சிவம் திரைப்படம் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் இந்த பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

மேலும் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் பன்னிரெண்டாம் இடத்திலும் சூரரைப் போற்று திரைப்படம் 13ஆம் இடத்திலும் இருக்கிறது. இந்த திரைப்படங்கள் எல்லாம் இந்த பட்டியலில் முதல் 15க்குள் இடம் பிடித்த தமிழ் திரைப்படங்கள் ஆகும்.

மேலும் இந்த பட்டியலில் தளபதி விஜய் நடித்த துப்பாக்கி 212 ஆம் இடத்திலும், கில்லி 213 ஆம் துள்ளாத மனமும் துள்ளும், 224 ஆம் இடத்திலும் கத்தி, 226 ஆம் இடத்திலும் பூவே உனக்காக, 237 ஆம் இடத்திலும் இடம்பெற்றிருக்கிறது.

மேலும் தமிழ் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்ட திரைப்படங்களாகிய 96 22ஆம் இடத்திலும், கைதி 24 ஆம் இடத்திலும் அசுரன் 28 ஆம் இடத்திலும், தேவர் மகன் 30 ஆம் இடத்திலும்
தளபதி 32 ஆம் இடத்திலும் சார்பட்டா பரம்பரை 33, தனி ஒருவன் 35 ஆம் இடத்திலும் வடசென்னை 36ஆம் இடத்திலும் இடம் பிடித்திருக்கிறது.

Most Popular