Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி விஜயுடன் ஜோடி சேராமல் போன நான்கு கதாநாயகிகள். காரணம் என்ன

தளபதி விஜயுடன் ஜோடி சேராமல் போன நான்கு கதாநாயகிகள். காரணம் என்ன

தளபதி விஜய் உடன் 90ஸ் களின் கதாநாயகிகள் பல பேர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.ரம்பா,தேவயானி, சங்கவி ,சிம்ரன் என்று பிரபலமான பல நடிகைகள் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் அதே சமயத்தில் டாப் ஹீரோயின்களாக இருந்த நான்கு கதாநாயகிகள் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்ததே இல்லை.

இதில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை லைலா .இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த உன்னை நினைத்து திரைப்படத்தில் முதலில் விஜய்யுடன் லைலா தான் நடித்திருக்கிறார் ஆனால் சில காரணங்களால் உன்னை நினைத்து திரைப்படத்தில் விஜய் விலகிக் கொண்டு அதில் சூர்யா நடிக்க நேர்ந்தது அதற்குப் பிறகு வேறு எந்த திரைப்படத்திலுமே நடிகை லைலா விஜய் உடன் ஜோடி சேரவில்லை.

- Advertisement -

அதேபோல் 90களில் ஃபேவரைட் ஹீரோயின்களின் மிகவும் முக்கியமான கதாநாயகி என்றால் அது மீனாதான் ஆனால் மீனா விஜயுடன் இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை .ஷாஜகான் படத்தில் சரக்கு வச்சிருக்கேன் என்ற பாடலில் மட்டும் தான் அவர் இணைந்து ஆடி இருப்பார்.

- Advertisement -

மேலும் அவர் பிரியமுடன், ஃப்ரெண்ட்ஸ்,என்றென்றும் காதல் போன்ற திரைப்படங்களை விஜய்க்கு ஜோடியாக மீனாதான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அது நிறைவேறாமல் போகிவிட்டதாக நடிகை மீனா பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

அஜித், பிரசாந்த், விக்ரம் என்று நிறைய நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகைக்கு கிரன் இதுவரை நடிகர் விஜய் உடன் எந்த திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை .இவரும் திருமலை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் விஜய் உடன் ஆடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடிகை ரோஜா. இவர் தளபதி விஜயுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடிக்கப் போவதாக ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டு ஏதோ சில காரணங்களினால் அது தடைப்பட்டு இருக்கிறது .அதனால் இவரும் இதுவரை நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்ததில்லை நெஞ்சினிலே என்ற திரைப்படத்தின் ஒரு பாடலை தவிர .

இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நடிகர் விஜய் நடித்த மின்சார கண்ணா திரைப்படத்தில் ரம்பா கதாபாத்திரத்தில் நடிகை ரோஜா தான் நடித்திருக்கிறார். பின் கால் சீட் பிரச்சனையால் அந்த காட்சிகள் விலக்கப்பட்டு அதில் நடிகை ரம்பாவை வைத்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். இது போன்ற காரணங்களினால் இப்படிப்பட்ட ஜோடிகளை திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

Most Popular