சினிமா

தளபதி விஜய் – அட்லீ – ஷாருக் கான் டிரென்டிங் புகைப்படம் ! ஜவான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா விஜய் ?

Vijay Atlee and Sharukh Khan

சென்ற வாரம் முதல் ஜவான் படத்தில் தளபதி விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் எனும் செய்தி சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருந்தது. நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த பின்னர் பாலிவுட்டில் தன் அறிமுகப் படத்திலேயே ஷாரூக் கனை இயக்குகிறார் அட்லீ.

செப்டம்பர் 21ஆம் தேதி அன்று தன் 36வது பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ அந்நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் “ இதை விட நான் பெரிதாக என்ன கெற்கப்ப போகிறேன் என் பிறந்தநாள் அன்று ! சிறப்பான பிறந்தநாளில் என்னுடைய தூண்கள் ஷாரூக் காங் மற்றும் என்னுடைய அண்ணன் தளபதி விஜய்யுடன். ” எனக் குறிப்பிட்டிருந்தார் விஜய், அட்லீ மற்றும் ஷாரூக் கான் மூவரும் கருப்பு உடையில் தோற்றம் அளிக்கின்றனர். அதில் வழக்கம் போல தளபதி விஜய் கூலாக தெரிகிறார். 57 வயதாகும் ஹாண்ட்சம் ஷாருக் கான் இன்னும் இளமையில் ஊஞ்சல் ஆடுகிறார். இந்தப் புகைப்படம் தான் தற்போது டிவிட்டர் டிரெண்டிங் !

Advertisement

எந்த இடத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று உறுதியாக தெரியவில்லை. ஜவான் படத்தின் படப்பிடிப்புகள் படக்குழு சமீபத்தில் சென்னை விரைந்தனர். ஆகையால் பெரும்பாலான நெருங்கிய வட்டாரங்கள் ஜவான் ஷுட்டிங் ஸ்பாட் என்று கூறுகின்றனர். இது குறித்து இன்னும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இதற்கு முன் தளபதி விஜய் அக்ஷய் குமாரின் ரவுடி ரத்தோர் படத்தில் கவுரவத் தோற்றம் அளித்தார்.

Advertisement

இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வந்த ஜவான் புரோமோ அதிரடியான வரவேற்பை பெற்றது. படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகிறது. படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லன் கதாப்பாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தளபதி விஜய் சிறப்புத் தோற்றம் அளித்தால் சிறப்பான தரமான சம்பவமாக இருக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top