Monday, May 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்ஏன்யா இந்த அநியாயம் பண்றீங்க.. நரிக்குறவர் பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய யூடியூபர்.. நடந்தது தான்...

ஏன்யா இந்த அநியாயம் பண்றீங்க.. நரிக்குறவர் பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய யூடியூபர்.. நடந்தது தான் என்ன.?.. வெளியாகிய உண்மை

கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஜாதி பார்த்து யாரும் பழகுகிறார்களா என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மையானது தற்போது அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான சர்ச்சை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .

- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தண்ணி வண்டி தமிழ் என்ற யூடியூப் சேனலில் நரிக்குறவர் பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் பேட்டி எடுப்பது போன்று ஒரு காணொளி வைரலாகி வந்தது . வந்து பேட்டியில் ஜாதி குறித்த கேள்விகளை நரிக்குறவர் பெண்ணிடம் கேட்டு இறுதியில் திருமணம் வரை சொல்வது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தன .

இது தொடர்பான அந்த வீடியோவில் பேட்டி எடுக்கும் இரண்டு இளைஞர்கள் நரிக்குறவர் பெண்ணிடம் தற்போது ஜாதி பார்த்து பழகுகிறார்களா? என்று கேள்வியை கேட்கிறார், அதற்கு அந்தப் பெண் யாரு தான் ஜாதி பார்த்து பழகுவதில்லை எல்லா காலங்களிலுமே ஜாதி பார்த்து தான் பழகுகிறார்கள் என கூறுகிறார் . இந்த பேட்டியின் போது அவருடன் இருந்த மற்றொரு இளைஞர் குறுக்கிட்டு தற்காலத்தில் எல்லாம் யாரும் ஜாதி பார்ப்பதில்லை என தெரிவிக்கிறார் .

- Advertisement -

இதற்கு பதில் அளித்த அந்தப் பெண் தற்போது யாரும் ஜாதி பார்க்கவில்லை என்றால் எனக்கு கல்யாணம் ஆகவில்லை உங்களில் யாரேனும் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என கேட்கிறார். அதற்கு அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளலாம் இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று கூறுகிறார். உடனே இருவரும் ஆடை போன்றவற்றை எடுப்பதற்காக கடைகளுக்கு செல்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன .

- Advertisement -

இந்த காட்சிகள் தத்ரூபமாக உண்மை போல படமாக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் இடையே இந்தக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை என்ற சப்டிட்டில் இடம் பெற்று இருக்கிறது. இதன் மூலம் இந்த வீடியோ ஆனது ட்ரெண்டிங் செய்வதற்காக சித்தரிக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு எடுக்கப்பட்டது என ஊர்ஜிதம் ஆகிறது .

சமூக வலைதளங்களில் இது போன்ற தத்ரூபமான வீடியோக்களை சித்தரித்து எடுத்து அவற்றை மக்களிடம் ட்ரெண்டிங் செய்வது வாடிக்கையாகி வருகிறது. இவற்றில் சில நன்மைகள் இருந்தாலும் விசித்தெரிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான நேரங்களில் தீமையாகவே முடிகிறது.

Most Popular