Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமா'தளபதி ரசிகர்கள் குஷி'.. விஜய் 67 இனி களைகட்டும்! படத்தில் முக்கிய புள்ளியை இணைத்திருக்கிறார் லோகி!

‘தளபதி ரசிகர்கள் குஷி’.. விஜய் 67 இனி களைகட்டும்! படத்தில் முக்கிய புள்ளியை இணைத்திருக்கிறார் லோகி!

பப்ளிசிட்டி போஸ்டர்களை பிரத்தியேகமாக வடிவமைக்கும் டோனி ஜான் என்பவரை விஜய் 67 படத்தில் இணைத்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் சிறப்பாக உருவாக்கி வருகிறது. படப்பிடிப்புகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றன. விடுபட்ட ஓரிரு காட்சிகள் மட்டுமே இன்னும் எடுக்கப்பட இருக்கிறது. வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சில வாரங்களில் பெயரிடப்படாத மற்றும் ரசிகர்களால் ‘தளபதி 67’ என அழைக்கப்படும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். அண்மையில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் வசூலில் உச்சம் தொட்டது. பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது வரை தமிழ் திரையுலகில் அதுதான் அதிக வசூல் பெற்ற படமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த வெற்றியைத் தொடர்ந்து இவர் தளபதி 67 படத்தை இயக்குகிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது. மேலும் படத்தில் பிரித்திவிராஜ், சஞ்சய் தத் உள்ளிட்ட பெரிய பிரபலங்களும் இணைகின்றனர். மும்பையை மையமாக வைத்து இயக்கப்படும் இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் ஆக நடிக்க உள்ளார் என்கிற தகவல்களும் வெளியாக இருக்கின்றது.

- Advertisement -

படத்திற்கான அனைத்து வேலைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டன. வாரிசு படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் நேரடியாக தளபதி 67 படத்திற்கு வந்தால் அடுத்த நாளே படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் எனவும் இயக்குனர் தரப்பில் இருந்து தகவல்கள் வருகின்றன.

இப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாக பிரபல பப்ளிசிட்டி போஸ்ட் வடிவமைப்பாளர் டோனி ஜான் இப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 24 ஏஎம் ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனராகவும் இவர் இருக்கிறார். இவருடன் தளபதி 67 படக்குழுவினர் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளின் படங்களுக்கு போஸ்டர் வடிவமைப்பாளராக இவர் இருந்து வருகிறார். அந்த துறையில் பிரபலமாக இருந்து வரும் இவரை விஜய் படத்திற்குள் எடுத்ததால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி உடன் இருக்கின்றனர்.

ஏற்கனவே இவர் கைதி திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular