செய்திகள்

மைண்ட் வாய்ஸ்னு நினைச்சி பேசிட்டேன்.. ஹீரோயினை கலாய்த்த உதயநிதி

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் விளையாட்டு துறை அமைச்சர் ஆனதால் தற்போது சினிமாவை விட்டு உதயநிதி ஸ்டாலின் விலகி இருக்கிறார்.

Advertisement

எனினும் தாம் ஏற்கனவே நடித்த கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் வரும் மார்ச் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் எப்போதுமே பேட்டியில் மனதில் பட்டதை நகைச்சுவையாக சொல்வதில் வல்லவர். அவருடைய பல பேட்டிகள் அவருடைய நகைச்சுவை பதிலுக்காகவே பிரபலமாக இருக்கிறது.

ஏற்கனவே நடிகர் ஆர்யாவின் கேப்டன் படத்தை வெளிப்படையாகவே கிண்டல் செய்து உதயநிதி ஸ்டாலின் ஓட்டி இருக்கிறார். ஏலியன் ஏன் இவ்வளவு பரிதாபமாக இருக்கிறது என்றும் அவர் பேசிய வீடியோ வைரலாக இருந்தது. இதேபோன்று விஷால் குறித்தும் அவர் பல நகைச்சுவை கருத்துக்களை கூறியிருக்கிறார்.

Advertisement

அவ்வளவு ஏன் வெற்றிகரமாக ஓடிய டான் படத்தையும் தாம் முதலில் படத்தை பார்த்தபோது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் படம் திரையரங்கில் சிறப்பாக ஓடியது என்றும் வெளிப்படையாகவே பல விஷயங்களை கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் கண்ணை நம்பாதே திரைப்படத்திற்கான ப்ரொமோஷன் பணி நடைபெற்று இருக்கிறது.

இதில் பேட்டி ஒன்றில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா இயக்குனர் மு.மாறன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது இயக்குனர் பேசும்போது தான் நரகாசுரன் படத்தை பார்த்துவிட்டு தான் ஆத்மிகாவை இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாக கூறினார். உடனே உள்ளே குறுக்கிட்ட உதயநிதி ஸ்டாலின் நரகாசுரன் படம் தான் ரிலீஸ் ஆகும் இல்லையே அப்புறம் எப்படி படம் பார்த்தீங்க என்று கேட்டார்.

அதற்கு இயக்குனர் இல்லை முழு படத்தையும் நான் பார்க்கவில்லை. சின்ன சின்ன கிளிப்பிங்ஸ் காட்சிகளை எல்லாம் பார்த்தேன். அதில் ஆத்மிகாவின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் நல்ல வேலை நீங்கள் முழு படத்தையும் பார்த்து இருந்தீர்கள் என்றால் நிச்சயமாக ஆத்மிகாவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்திருக்க மாட்டீர்கள் என்று கூறினார்.

உடனே தாம் மனதில் நினைத்ததை பேசி விட்டோம் என்று முதலில் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தார். மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசி விட்டதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top