Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentஉறியடி 2 தோல்வியா.. எவன் சொன்னது.. சூர்யாவே கேக் ஊட்டிவிட்டு கொண்டாடுனாருயா.. கொதித்துபோன விஜய்குமார்

உறியடி 2 தோல்வியா.. எவன் சொன்னது.. சூர்யாவே கேக் ஊட்டிவிட்டு கொண்டாடுனாருயா.. கொதித்துபோன விஜய்குமார்

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இயக்குநரும் நடிகருமான விஜய் குமார் நடித்துள்ள திரைப்படம் Fight Club. இதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டீசரை பார்த்த பலரும் தல்லுமல்லா  படத்தை போல் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். அதேபோல் கொஞ்சம் சீரியஸ் படமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதேபோல் உறியடி மற்றும் உறியடி 2 ஆகிய படங்களை போல் மீண்டும் இயக்குநர் விஜய் குமார் கேங் படத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான விஜய் குமார் Fight Club படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது உறியடி 2 படத்தின் தோல்வி பற்றிய கேள்வியை நெறியாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய்குமார், உறியடி 2 படம் தோல்வி என்று யார் சொன்னது என்று தெரியவில்லை. உறியடி 2 படம் தூத்துக்குடி சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஒன்று. மக்களின் துயரை பெரும்பான்மை மக்களுக்கு கொண்டு சொல்லும் படம்.

- Advertisement -

சூர்யா சாரின் 2டி நிறுவனம் உறியடி 2 படத்தை தயாரித்தது. அந்த நிறுவனம் தயாரிப்பில் உறியடி வெளியிடுவதற்கு முன்பாக ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்ததன் மூலமாக அந்த படத்திற்கு லாபம் ஈட்டப்பட்டது. அதன்பின் நாங்கள் திரையரங்கில் வெளியிட்டும் நல்ல லாபம் வந்தது.

- Advertisement -

அந்த படத்திற்கு நான் வெற்றிவிழா நடத்த வேண்டாம் என்ற முடிவில் இருந்தேன். ஏனென்றால் மக்கள் பிரச்சனைகளையும், கொல்லப்படுவதையும் வைத்து படமெடுத்துவிட்டு, அதனை வெற்றி என்று கொண்டாடுவதில் ஏற்பு இல்லை. அதனால் வெற்றி விழா நடத்துவதை தவிர்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Most Popular