Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் வரும் காதல் மன்னன் சூர்யா.. 49 ரூபாய் டிக்கெட்டில் திரைக்கு வரும் வாரணம் ஆயிரம்

மீண்டும் வரும் காதல் மன்னன் சூர்யா.. 49 ரூபாய் டிக்கெட்டில் திரைக்கு வரும் வாரணம் ஆயிரம்

சென்னை கமலா திரையரங்கம் தரமான விண்டேஜ் படங்களை மீண்டும் ரீலீஸ் செய்து நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். அதனைப் பார்த்து மற்ற திரையங்குகளும் அடுத்தடுத்து பழைய படங்களை வெளியீட்டு ஹவுஸ்புல் ஷோக்களை ஓட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்த ஆண்டு அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து பாபா, வேட்டையாடு விளையாடு, சுப்ரமணியபுரம், ஆளவந்தான், முத்து ஆகிய பழைய ஹிட்டான படங்கள் வெளியாகின. நல்ல வசூலையும் கண்டுள்ளது. இந்த வழியில் திரையரங்குகள் அடுத்தடுத்து ரசிகர்களின் ஃபேவரிட் படங்களை வெளியீட்டு கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள கமலா திரையங்கம் இந்த ஆண்டு பெரிய படங்கள் மற்றும் வசூல் செய்ய சிரமப்பட்ட போதெல்லாம் பழைய சிறந்த படங்களை 49 ரூபாய் டிக்கெட் விலையில் மீண்டும் வெளியிட்டது. தனுஷின் வடசென்னை படம் முதலில் சிறப்பாக ஓடியது. சுமாரான படங்களை விட இதுவே நல்ல லாபத்தை கொடுள்ளது என்றார் தியேட்டர் நிர்வாகி.

- Advertisement -

இதனையடுத்து தனுஷின் மற்றொரு விண்டேஜ் படமான 3 மீண்டும் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமலா திரையரங்கை தொடர்ந்து சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகள் மயக்கம் என்ன, அன்பே சிவம், விருமாண்டி போன்ற படங்களை திரையிட்டு கொண்டுள்ளனர்.

- Advertisement -

ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவரவர்களது விருப்பட்ட படங்களை வெளியிடுமாறு கேட்டனர். அதிகம் கேட்கப்பட்ட படமான வாரணம் ஆயிரம் மீண்டும் ரீலீஸ் ஆவதை கமலா திரையரங்கம் உறுதி செய்துள்ளது. இதற்காக டிக்கெட் விற்பனைகள் இன்று மாலை 6 மணி முதல் இணையத்தில் துவங்கும் எனவும் அறிவித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது. மற்ற மாவட்ட திரையரங்குகள் இதனைப் பின்பற்றி நல்ல வசூலைக் காணும். ஹாரிஸ் ஜெயராஜின் மெல்லிய இசையில் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கிறார்கள்.

Most Popular