Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஇவ்வளவு வன்மம் ஆகாது.. கேப்டன் விஜயகாந்த் முதுகில் குத்திய வடிவேலு.. ! அப்படி என்ன சண்டை...

இவ்வளவு வன்மம் ஆகாது.. கேப்டன் விஜயகாந்த் முதுகில் குத்திய வடிவேலு.. ! அப்படி என்ன சண்டை தெரியுமா.. !

தமிழ் சினிமாவின் புரட்சிக் கலைஞன் மற்றும் மக்களின் கேப்டன் விஜயகாந்த் காலை 6:10 மணிக்கு இவ்வுலகை விட்டு வெளியேறினார். கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சீராக இல்லாமல் அவதிப்பட்டுவந்தார். அண்மையில் அது மிகவும் சீரியசாக போக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- Advertisement -

தீவிர சிகிச்சை பெற்று வந்த போதிலும் உயிர் துறந்தார். அவரை இறுதியாக காண மக்கள் வெள்ளம் போல திரண்டனர். கேப்டன் விஜயகாந்த் எத்தனையோ நபர்களை சினிமாத் துறையில் வளர உதவி செய்துள்ளார். அதில் நம் தளபதி விஜய்யும் ஒருவர். நேற்று இரவு தேம்பி தேம்பி அழுத கொண்டே அஞ்சலி செலுத்தினார்.

மேலும் ரஜினி, கமல் உட்பட சினிமாத் துறையைச் சேர்ந்த பல்வேறு நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆனால் ஆரம்பக் காலத்தில் இருந்து தனது ஊர்காரப் பையன் என பல உதவிகள் பெற்ற நடிகர் வடிவேலு தலையைக் கூட காட்டாமல் இருந்ததை பயங்கரமாக கண்டித்து வருகின்றனர்.

- Advertisement -

சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவை சேர்த்துக் கொண்டு அவருக்கு நல்ல பாதையைக் காட்டியவர் விஜயகாந்த். அந்த நன்றியை கேவலம் ஒரு சின்ன சண்டைக்காக மறந்தது மிகவும் மோசம். நேரில் வர இயலவில்லை என்றாலும் குறைந்தது இரங்கல் ஆவது தெரிவித்து இருக்கலாம் என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

விஜயகாந்த் மற்றும் வடிவேலு பக்கத்து பக்கத்து வீட்டில் இருப்பவர்கள். அப்போது இருவருக்கும் இடையே வாகனம் பார்க்கிங் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தச் சண்டையினால் இன்று வரை அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. கேப்டன் விஜயகாந்த் செய்த உதவிக்கு வடிவேலு காலம் முழுக்க நன்றிக் கடன் பெற்றவர். ஆனால் இப்படி கேவலமாக முதிகில் குத்தியுள்ளார் என பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவை தாக்கியுள்ளார்.

இன்று வடிவேலு செய்த செயல் அவரின் மேல் இருக்கும் மரியாதையை குறைத்துள்ளது. அந்த அளவு கேப்டன் மேல் இவ்வளவு வன்மம் கொண்டுள்ளார் வடிவேலு, ஆனால் கேப்டன் விஜயகாந்தோ இதுவரை வடிவேலுவை பற்றி வெளியில் ஒருமுறை கூட தப்பாக பேசியதில்லை. அதான் அவரது மனசு.

Most Popular