Tuesday, December 3, 2024
- Advertisement -
HomeUncategorizedமாரி செல்வராஜ், ரஞ்சித் மட்டும் தான் ஜாதீீயில் எண்ணெயை ஊற்றினார் களா?? வைரமுத்து காட்டம்

மாரி செல்வராஜ், ரஞ்சித் மட்டும் தான் ஜாதீீயில் எண்ணெயை ஊற்றினார் களா?? வைரமுத்து காட்டம்

ஒரு மருத்துவராக பணி செய்பவர் தன் பெயருக்கு அருகில் மருத்துவர் என்று இணைத்துக் கொள்வது இயல்பு. ஆனால்  தன் குழந்தைக்கும் மருத்துவர் என்று பெயரோடு இணைத்தால் அது எவ்வளவு அபத்தமோ அந்த அபத்தத்தை தான் இன்று இந்த சமூகம் செய்து கொண்டு இருக்கிறது.

- Advertisement -

முன்னோர்கள் அன்று செய்து வந்த தொழில் பெயர்களால்  பிரிக்கப்பட்டனர்.ஆனால் தற்பொழுதும் அவர்களின் தலைமுறைகள் அந்தப் பெயர்களாலேயே அழைக்கப்பட்டு வருகின்றனர்.பகுத்தறிவாளர்கள் பலர் முன்னெடுத்த முயற்சிகளால் சாதி பேதங்கள் பல சதவீதங்கள் குறைந்து போய் உள்ளது   என்பது சத்தியமான உண்மை.

முற்றிலும் ஒழிந்து விட்டதா என்று கேட்டால் ?? ஆம் என்று உறுதியாக பதில் அளிப்பதற்கு தயக்கம் இருப்பதும் உண்மைதான்… ஆனால் வரும் தலைமுறைகள் மத்தியில் அத்தகைய போக்கு நிலவ வாய்ப்பில்லை என்பது நம்பிக்கை அளிக்கும் செய்தி.மாற்றங்கள் நிகழ வேண்டும் சாதிகள் ஒழிய வேண்டும் என்ற நோக்கில் திரைப்படங்கள் வரும் வேளையில், விஷமிகளின் விஷப் பிரச்சாரத்தால் திரிக்கப்பட்டு இயக்குனர்களே விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் அத்தகைய சூழலில் சிக்கிக் கொண்டவர்கள், மாரி செல்வராஜ் மற்றும் பா. இரஞ்சித் ! இதனைப் பற்றி பாடல் ஆசிரியரான வைரமுத்துவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வைரமுத்து எந்த இயக்குனரும் சாதிய வன்மங்களை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் படம் எடுக்க மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

ஒரு சாதியை முன்னிறுத்தி திரைப்படம் எடுத்தால், அது நிச்சயம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாது என்று குறிப்பிட்டுள்ள வைரமுத்து, ஏனெனில் சாதியாக பிரிக்கும் பொழுது ஒரு பகுதி மக்களை மட்டுமே திருப்தி படுத்த முடியும் என்று விளக்கியுள்ளார். அதனால் அனைவரும் படம் பார்த்து ரசிக்க மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அதன் காரணமாகவும் இயக்குனர்கள் அத்தகைய படங்களை எடுக்க மாட்டார்கள். மேலும் எந்த இயக்குனர்களும் அத்தகைய சாதிய வன்மங்களை தூண்ட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களிடையே கொண்டு செல்ல மாட்டார்கள். மாறாக இத்தகையவர்களும் மண்ணில் நம்முள் நம்மில் உள்ளார்கள் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றும் வைரமுத்து அறிவுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் மறுமலர்ச்சி பெற வேண்டும் என்ற உன்னத நோக்கோடு தான் இத்தகைய படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்று வைரமுத்து நம்பிக்கை அளித்துள்ளார்.மேலும் வெளிநாடுகளில் பெண்கள் தன் பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை இணைத்துக் கொள்வார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ள வைரமுத்து, எடுத்துக்காட்டிற்கு ஷில்பா ஷெட்டி, கரீனா கபூர் ,கல்பனா ஐயர் என்று பெயரை மாற்றி கொள்வதாக கூறியுள்ளார்.

ஆனால் தமிழகத்தில் அது போல் எந்த  பெண்களும் தன் பெயருக்கு பின்னால் ஜாதியை எழுத விரும்புவதில்லை .ஏனெனில் பெண் கல்வியும் பெண் உரிமையும் முன்னேறிய நாட்டில் உள்ளதால் வந்த விளைவு  என்று தான் புரிந்து கொள்வதாக வைரமுத்து பெருமிதத்துடன் கூறினார்.

மேலும் முற்றிலுமாக சாதியை ஒழிக்க வேண்டிய இடத்தில் இன்னும் நாம் முனைய வேண்டி உள்ளது என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றும்  வைரமுத்து கூறினார்.ஒவ்வொரு வழிப்பாட்டு தளங்களுக்கும்  கூட அடுத்த மதத்தினர் செல்வது அரிது.

ஆனால் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்று கூடி ஒற்றுமையாக செல்வது திரையரங்கத்திற்கு மட்டும்தான்.!அதனால் எளிதாக அனைத்து மக்களையும் சென்றடையும் சிறந்த தொழில்நுட்பத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கும் மக்களின் ஒற்றுமைக்கும் பயன்படுத்தினால் சிறப்பு என்பது மக்களின் கருத்து.

Most Popular