Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாஇது வனிதா 2.0.. ! மீண்டும் ஹீரோயினாக ரீ என்ட்ரி கொடுக்கும் வனிதா விஜயகுமார்.. !

இது வனிதா 2.0.. ! மீண்டும் ஹீரோயினாக ரீ என்ட்ரி கொடுக்கும் வனிதா விஜயகுமார்.. !

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான மற்றும் நடிகையான வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் மீண்டும் ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். நம்பிராஜன் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு ஹிந்து – முஸ்லிம் காதல் கதையில் விஜய்யிக்கு ஜோடியாக அறிமுகமானார்.

- Advertisement -

முதல் படத்தை விட இரண்டாவதாக ராஜ்கிரணுடன் இணைந்து நடித்த மாணிக்கம் படத்தில் தான் கவனத்தைப் பெற்றார். உடனே மலையாளத்தில் ஹிட்லர் பிரதர்ஸ் மற்றும் தெலுங்கில் தேவி எனும் படத்திலும் நடித்து மற்ற மொழிகளில் அறிமுகமாகினார். இந்த 4 திரைப்படங்களுக்குப் பின் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

முதல் திருமணத்திற்குப் பின் சினிமாவை முற்றிலுமாக ஒதுக்கினார். 2013ஆம் ஆண்டு ‘ நான் ராஜாவாக போகிறேன் ’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தார். ஆனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. 2019 – 2020இல் விஜய் டிவி பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் ட்ரெண்ட் ஆகினார்.

- Advertisement -

ரீ என்ட்ரி கொடுக்கும் வனிதா விஜயகுமார்

இந்த ஆண்டு மே மாதம் தெலுங்கில் வெளியான மல்லி பெல்லி படத்தின் மூலம் 8 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவுக்குள் மூன்றாவது முறை நுழைந்தார். தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதைப் பற்றியான லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஆர்.வி.ஆர் நிறுவனம் தயாரிக்க நவீன் இயக்கத்தில் ‘ கடைசி தோட்டா ’ எனும் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக வலம் வரவுள்ளார். வனுதவுடன் ராதா ரவி, வையாபுரி உட்பட சிலர் நடிக்கின்றனர்.

தொடர் கொலைகளை செய்யும் குற்றவாளி மற்றும் அதைக் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தும் அதிகாரியைச் சுற்றிய கதைக் களத்தைக் கொண்டது இத்திரைப்படம். கொடைக்கானல் மற்றும் புதுச்சேரியில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Most Popular