விஜய் படங்களிலேயே குறைந்த அளவில் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று என்றால் அது வாரிசு தான். தெலுங்கு இயக்குனர், தெலுங்கு தயாரிப்பு நிறுவனம், குடும்பக்கதை சுமாரான ட்ரெய்லர் என பல்வேறு குறைபாடுகளுடன் வெளிவந்த திரைப்படம் தான் வாரிசு. இது அஜித்தின் துணிவு திரைப்படத்துடன் மோதினால் வெற்றி பெறுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைத்து சந்தேகங்களையும் தூக்கிப்போட்டு உடைப்பது போல் இயக்குனர் வம்சி சிறப்பான ஒரு படத்தை விஜய ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். விஜய்க்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மிகவும் அதிகம். இதனால் அவர்களை மையப்படுத்தி இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது. பல ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு படையெடுத்து வந்தனர். இதன் காரணமாக முதலில் குறைந்த திரையரங்குகளில் வெளியிடப்பட்ட வாரிசு திரைப்படம். பின்னர் அதிக திரையரங்குகள் கிடைத்தது.
மேலும் ஹிந்தி , தெலுங்கு வெளிநாடு என அனைத்து வெளிநாட்டு மார்க்கெட்டிலும் வசூல் சாதனையும் வாரிசு திரைப்படம் படைத்தது. இதில் முதல் 11 நாளில் 210 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது படம் மூன்று வாரங்களை கடந்துள்ள நிலையில் 300 கோடி வசூலைவாரிசு திரைப்படம் எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தமிழ் சினிமாவில் 300 கோடி வசூல் கிளப்பில் இரண்டு படங்களை வைத்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார்.
விஜய் திரைப்பட வாழ்க்கையில் அதிக வசூல் எட்டிய திரைப்படம் என்றால் அது அட்லி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் தான். அந்த படம் 308 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்தது. தற்போது வாரிசு திரைப்படம் 300 கோடியை எட்டி இருப்பதால் பிகிலின் வசூல் சாதனையை வாரிசு முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொங்கல் பண்டிகை வெளியான துணிவு திரைப்படம் 200 கோடி நெருங்கி உள்ளது. அதனை விட 100 கோடி அதிகம் வசூல் செய்து வாரிசு பொங்கல் பந்தயத்தில் முதல் இடத்தை பிடித்தி இருக்கிறது.