சினிமா

வாரிசு படத்திற்கு வந்திருக்கும் சிக்கல்; பீஸ்ட் மாதிரி இதுவும் போய்டுமோ? – பதறும் தியேட்டர் உரிமையாளர்கள்!

வாரிசு படத்திற்கு தமிழக விநியோக உரிமைக்கான தொகையை குறைத்துக் கொடுக்கும் படி தயாரிப்பாளரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய், பூஜா ஹேடே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து, நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை அள்ளியது. சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் ஆனது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் படம் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது.

Advertisement

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் 66-வது திரைப்படம் வாரிசு. இப்படத்தினை வம்சி இயக்குகிறார். தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தினை தயாரித்து வருகிறார். வாரிசு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தியேட்டர் விநியோகஸ்தர் உரிமம் 80 கோடி ரூபாய்க்கு விற்பதற்கு தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்து இருக்கிறது.

மாஸ்டர் திரைப்படம் 82 கோடி ரூபாய்க்கு விநியோகஸ்தம் செய்யப்பட்டதால், 80 கோடியை நிர்ணயித்திருக்கிறார் தில் ராஜு. ஆனால் தமிழக திரைப்பட விநியோகஸ்தர்கள் இத்தொகைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Advertisement

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் சுமார் 60 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் ஆனதால், வாரிசு திரைப்படத்திற்கு குறைத்துக் கொடுக்கும்படி விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்றும் தெரிகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் குடும்பம் சார்ந்த கதையில் நடித்து வருவதால் இப்படத்திற்கு வழக்கமாக இளைஞர்கள் மட்டுமல்லாது, குடும்பங்களிலும் எதிர்பார்ப்பு பரவி வருகிறது. சரியாக 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளிவர இருப்பதால் விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்குவதற்கு முற்படுகின்றனர். சரியான விலையில் கிடைக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு நாட்களில் இதன் உரிமையும் விற்று தீர்ந்து விடும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top