சினிமா

இது தமிழ்நாடா? ஆந்திராவா? தெலுங்கு வாரிசுக்கு அமோக வரவேற்பு

தெலுங்கு மார்க்கெட்டை விரிவு படுத்துவதற்காக நடிகர் விஜய் ஆந்திராவில் உள்ள பிரபல தயாரிப்பாளரான தில்ராஜுடன் இணைந்து படத்தில் நடிக்க சம்மதித்தார். இதன் பிறகு தான் வம்சியுடன் வாரிசு திரைப்படம் உருவானது. ஆனால் எதிர்பாராத விதமாக வாரிசு திரைப்படம் தமிழில் மட்டும்தான் ஜனவரி 11ஆம் தேதி திரைக்கு வந்தது. வாரிசின் தெலுங்கு டப்பிங் ஆன வாரிசுடு மூன்று நாட்களுக்குப் பிறகு ஜனவரி 14-ம் தேதியான இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீசானது.

Advertisement

இதில் சுமார் 385 திரையரங்குகளில் வாரிசுடு திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரிலீஸ் ஆனதோ, தற்போது அதே அளவிற்கு ஆந்திராவில் திரையரங்குகள் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் வாரிசு திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .மேலும் தெலுங்கு படம் போல் இருப்பதாகவும் தெலுங்கு சீரியல் போல் இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்தது.தற்போது அதுவே வாரிசுடு படத்திற்கு சாதகமாக மாறிவிட்டது.

இன்று காலை முதல் ஆந்திராவில் உள்ள பெரும்பான்மையான திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சியாக இருக்கிறது. பல்வேறு திரையரங்குகளில் விஜய்க்கு கட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி எல்லாம் நடைபெற்றது. சுதர்சன் என்ற திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வாரிசுடு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 10 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதன் மூலம் தெலுங்கு மார்க்கெட் விஜய் அதிகப்படுத்தி விட்டார் என்று கூறலாம். இதன் மூலம் வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வசூலும் இன்றிலிருந்து அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் திரையரங்குகளை பொறுத்தவரை சிரஞ்சீவி படத்துக்கு 600 திரையரங்குகளும் பாலகிருஷ்ணா படத்திற்கு 450 திரையரங்குகளும் விஜயின் வாரிசுடுக்கு 385 திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top