Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசு படத்தை பாலோ செய்யும் வாத்தி.. ஹிட் ஆகுமா என எதிர்பார்ப்பு

வாரிசு படத்தை பாலோ செய்யும் வாத்தி.. ஹிட் ஆகுமா என எதிர்பார்ப்பு

- Advertisement -

இயக்குனர் வெங்கி அத்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தைப் பற்றிய சில அப்டேட்ஸ்கள் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தினுடைய எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் படக்குழுவினர்கள் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

கடந்த மாதம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியான வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முதல் நாள் இந்த திரைப்படத்தைப் பற்றிய ஸ்பெஷல் ஷோ ஒன்றை பட குழுவினர்கள் வெளியிட்டார்கள். இது இந்த திரைப்படத்தைப் பற்றிய ஆர்வத்தை எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதன் மூலம் இந்த திரைப்படத்தை காண வேண்டும் என்று எதிர்பார்த்த பல ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி வந்து பார்த்து ரசித்தார்கள். மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய ரசிகர்களுடைய கருத்து என்ன என்பதையும் அந்த ஸ்பெஷல் ஷோவின் மூலம் தெரிந்து கொண்டார்கள்.

- Advertisement -

இதைத்தான் தற்பொழுது வாத்தி பட குழு செய்ய முடிவு செய்து இருக்கிறது. வருகின்ற 17ஆம் தேதி திரையரங்களில் வெளியாகும் வாத்தி திரைப்படத்திற்கு அதற்கு முந்தைய நாளில் ஸ்பெஷல் ஷோ என்ற ஒன்றை வெளியிடுவதாக முடிவு செய்து இருப்பதாக பட குழுவினர்கள் தகவல் வெளியிட்டு இருக்கிறார்கள். இதன் மூலம்  வாரிசு படத்தை போல், வாத்தி திரைப்படமும் செவன் ஸ்கிரின்ஸ் நிறுவனம் தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது.

- Advertisement -

மேலும் இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிகை சமியூக்தா ஆகியோர் நடித்த இந்த வாத்தி திரைப்படத்திற்கு யூ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது .மேலும் இந்த திரைப்படம் இரண்டு மணி நேரம் 19 நிமிடம் என்ற நேரம் நீளத்தை கொண்டு அமைந்திருக்கிறது. திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இது திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular