தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான நடிப்பு மூலம் தனக்கென ரசிகர்களை கட்டமைத்துக் கொண்டவர் நடிகர் தனுஷ். தனது பாடலாளும், நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தனுஷ் படங்கள் அசுரன் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது.
இந்த நிலையில் அவருடைய அடுத்த திரைப்படமான வாத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திருக்கிறது. ஏற்கனவே வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எல்லாம் ஹிட்டான நிலையில், அந்தப் படத்திற்கு நடைபெற்ற வர்த்தகம் மிகவும் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். அதாவது வாத்தி திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமம் வெறும் 17 கோடி ரூபாய்க்கு தான் விற்கப்பட்டிருக்கிறது.
இது சிவகார்த்திகேயனின் பிசினஸை விட மிகவும் குறைவு என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் கூட 25 கோடி ரூபாய் தமிழ்நாடு திரைப்பட உரிமம் விற்கப்பட்டது.ஆனால் வாத்தி படத்திற்கு அதைவிட குறைவாக ஏன் விற்கப்பட்டது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடைசியாக தனுஷ் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழகத்தில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்த நிலையில் வாத்தி திரைப்படத்திற்கு குறைந்தபட்சம் 25 கோடி ரூபாயாவது விற்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அதைவிட ஏன் குறைந்த அளவு திரைப்பட விநியோகம் விற்கப்பட்டது என தனுஷ் ரசிகர்களே கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரைத்துறை வர்த்தக நிபுணர் இது தெலுங்கு இயக்குனர் எடுக்கும் படம் என்பதால் தமிழில் ஹிட் ஆகுமா என்ற தயக்கம் தயாரிப்பாளர் மத்தியில் இருப்பதால் குறைந்த அளவில் அவர் திரையரங்கு உரிமத்தை விட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.