செய்திகள்

வீரம் பட நடிகரும், சிறுத்தை சிவா தம்பியுமான பாலா மருத்துவமனையில் அனுமதி

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த நடிகர் பாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு அன்பு என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகர் பாலா.

Advertisement

தவமின்றி கிடைத்த வரமே என்ற பாடல் அப்போது பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அன்பு திரைப்படம் பாடலுக்காகவே நன்றாக ஓடியது. அதன் பிறகு மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பாலா நடித்து வந்தார்.

இதில் மீண்டும் 2014 ஆம் ஆண்டு அஜித்துக்கு தம்பியாக வீரம் படத்தில் நடித்தார். அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதேபோன்று மோகன் லாலுடன் புலி முருகன், லூசிபர்  போன்ற பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement

பாலா பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை சிவா பாலா ஆகியோரின் தாத்தா அருணாச்சலம்  ஸ்டூடியோஸ் என்று நிறுவனத்தை நடத்தி வந்தார். இதேபோன்று இவரது தந்தை ஜெயக்குமார் சுமார் 350 திரைப்படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் பாலாவுக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மிகவும் ஆபத்தான நிலையில் தற்போது சென்னையில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இயக்குனர் சிவாவும் சூர்யா 42 படத்தை விட்டு சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பாலா 2010 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கரில் பங்கேற்ற அமிர்தா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவருடன் ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு 2019 ஆம் ஆண்டு டாக்டர் எலிசபத்தை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பலரும் பாலா பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top