Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாவெந்து தணிந்தது காடு 2 அப்டேட் வெளியானது.. ! ஷூட்டிங் குறித்து தயாரிப்பாளார் கணேஷ்.. !

வெந்து தணிந்தது காடு 2 அப்டேட் வெளியானது.. ! ஷூட்டிங் குறித்து தயாரிப்பாளார் கணேஷ்.. !

சிலம்பரசன் – கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மூன்றாவதாக தயாராகி படம் வெந்து தணிந்தது காடு. சிறிய கிராமத்தில் இருந்து புறப்பட்டு பாம்பே சென்று பெரிய கேங்ஸ்டராக சிம்பு வளருவதே இக்கதை. முதல் பாகம் எதிர்பார்த்த அளவு விமர்சனங்களைப் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தைக் கண்டது.

- Advertisement -

திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 2 பாகங்கள் இருப்பதை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உறுதிச்செய்தார். அதற்கேற்பவே கௌதம் மேனனும் எழுத்தாளர் ஜெயமோகனும் எழுதினர். வெந்து தணிந்தது காடு கிளைமாக்ஸ்க்குப் பின் அடுத்த பாகத்தின் டீஸர் இணைக்கப்பட்டிருந்தது. அதில் சிம்பு மிகப் பெரிய தாதாவாக இருந்தார்.

இந்தப் படத்திற்குப் பின் சிம்புவின் பத்து தல படம் வெளியாகிவிட்டது. அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வரலாற்றுப் படம் ஒன்றில் நடிக்கவும் உள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் அப்படத்தை முடித்தப் பின்பே வெந்து தணிந்தது காடு 2ஆம் பாகத்தில் சிம்பு நடிப்பார்.

- Advertisement -

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியது வெந்து தணிந்தது காடு. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் இரண்டாம் பாகத்தின் குட்டி அப்டேட்டை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது, “ வெந்து தணிந்தது காடு 2 திரைக்கதையை இயக்குனர் கௌதம் மேனன் எழுதி வருகிறார். அவர் அப்பணிகளை முடித்த பிறகு படத்தின் ஷூட்டிங் நடைபெறும். இதில் நடிக்க சிம்பு மிகவும் ஆர்வமாக உள்ளார். இதற்கிடையே நாங்கள் சின்ன சின்ன படங்களை தயாரிக்கவுள்ளோம். ” என்றார்.

- Advertisement -

விரைவில் துவங்கும் தேசிங்கு பெரியசாமியின் படம் எப்படியும் ஒன்றரை ஆண்டு போகும். அடுத்த வருடம் இந்தப் படம் வெளியானப் பின் வெந்து தணிந்தது காடு 2 துவங்கினாலும் அதுக்கு ஓர் ஆண்டு தேவைப்படும். அப்படி பார்த்தால் வி.டி.கே 2ஆம் பாகத்தை 2025இல் எதிர்பார்க்கலாம்.

Most Popular