Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாதெறிக்கும் தளபதி 68 அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. ! ஃபர்ஸ்ட் லுக் எப்போது ?

தெறிக்கும் தளபதி 68 அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.. ! ஃபர்ஸ்ட் லுக் எப்போது ?

தளபதி விஜய்யின் படம் என்றாலே திருவிழா கணக்கான கொண்டாட்டம் தான். லோகேஷ் கனகராஜ் – விஜய் இரண்டாவது முறை இணைந்திருக்கும் லியோ படத்திற்கு மிக பயங்கரமான எதிர்பார்ப்புகள். ஜனவரி மாதம் கேசுமிரில் துவங்கப்பட்ட ஷூட்டிங் கடந்த வாரம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

- Advertisement -

அடுத்ததாக படக்குழு விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பிக்கவும் இருக்கிறது. லியோ படத்திற்கு இடையே தளபதி விஜய் தன் அரசியல் பணிகளை செய்தார். 2024 தேர்தலுக்காக முழு நேர அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார் என பேசப்படுவதால் உடனே தான் அடுத்தப் படத்தையும் முடிக்க என்னுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 68 – வெங்கட் பிரபு

லியோ படத்தின் போதே தன் அடுத்தப் படத்தின் அறிவிப்பை வழங்கிவிட்டார் விஜய். பிகில் படத்திற்குப் பிறகு மீண்டும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் முறையாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். வெங்கட் பிரபு படம் என்பதால் வழக்கம் போல யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக பணிபுரிகிறார்.

- Advertisement -

தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் லியோ படக்கிழுவிடம் இருந்து மட்டுமே ரசிகர்களுக்கு விருந்து கிடைத்தது. லியோ படத்தை முழுமையாக முடித்தப் பிறகே விஜய் அடுத்தப் படத்தில் கவனம் செலுத்துவார் என சமூக வலைதளங்களில் கூறினர்.

- Advertisement -

அடுத்த மாதம் வெங்கட் பிரபு & கோ பணிகளை துவங்குகிறார்கள். ஆகஸ்ட் 31ஆம் தேதி யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் அன்று எதேனும் அப்டேட் நிச்சயம் கிடைக்கும். அதற்கு முன்பே இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு தன் டிவிட்டர் பக்கத்தில் தெறிக்கும் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

இன்று வெங்கட் பிரபு தான் தயாரிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பை கொடுத்தார். தளபதி 68 குறித்த அப்டேடாக இருக்கும் என நினைத்து நாங்கள் ஏமாந்துவிட்டோம் என ஒரு விஜய் ரசிகர் பதிவிட அதற்கு வெங்கட் பிரப, “ தளபதி 68 அறிவிப்பு சும்மா தெறிக்கும் , காத்திருங்கள் ” என ரிப்ளை செய்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கூட்டியுள்ளது.

Most Popular