சினிமா

விடுதலை படத்தின் முதல் விமர்சனம்! மிரண்டு போன விநியோகஸ்தர்

தமிழ் சினிமாவில் இதுவரை தோல்வியே கொடுக்காத இயக்குனர்களில் வெற்றி மாறனும் ஒருவர். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என பல்வேறு படங்களை கொடுத்துள்ள வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் முதல் பாகத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

எப்போதும் ஆக்சன் கதைகளை இயக்கும் வெற்றிமாறன் சூரியை வைத்து படம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் அந்த படத்தை காண காத்திருந்தார்கள். இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த படத்திற்கான டிக்கெட் விற்பனை மும்முரமாக நடைபெற்று உள்ள நிலையில் படத்தை வெளியிடும் கடைசி நேரம் வரை வெற்றிமாறன் படத்தின் வசனங்களையும் சில காட்சிகளில் மாற்றி வருகிறார் .இது ரசிகர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ரெட் ஜெயின்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் விடுதலை படத்தை சிறப்பு காட்சியை பார்த்திருக்கிறார்கள்.

Advertisement

இதை பார்த்த அவர்கள் வெற்றிமாறனை அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள். படம் மிரட்டும் அளவிற்கு இருப்பதாகவும் விடுதலை படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டதாகவும் விநியோகஸ்தர்கள் கூறியிருக்கிறார்கள். இது வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் திரைப்படமாக அமையும் என்றும் அவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். எனினும் படத்தில் விஜய் சேதுபதி மிகவும் கொஞ்ச காட்சியில்தான் வருகிறார். ஆனால் படம் முழுக்க விஜய் சேதுபதி கேரக்டர் ஆன வாத்தியாரைப் பற்றி தான் மற்றவர்கள் பேசுகிறார்கள். இந்த படத்தில் ஒரு 20 நிமிட முக்கிய காட்சி ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தும் என்றும் போலீஸார்கள் எவ்வாறு விசாரணை நடத்துவார்கள் என்று கொடூரத்தையும் வெற்றிமாறன் இந்த படத்தில் காட்டி இருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top