Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் மோதும் அஜித் vs விஜய்..!  2024 கோடையில் வெளியாகும் தளபதி 68

மீண்டும் மோதும் அஜித் vs விஜய்..!  2024 கோடையில் வெளியாகும் தளபதி 68

தமிழ் சினிமாவின் அதிக ரசிகர்கள் உடைய நடிகர்கள் என்றால் அதில் விஜய்யும் அஜித் தான். இன்னும் சொல்லப்போனால் இவர்களை சுற்றி தான் தமிழ் சினிமாவே இயங்கிக் கொண்டிருக்கிறது. அண்மையில் பொங்கலுக்கு விஜயின் வாரிசும் அஜித்தின் துணிவும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது

- Advertisement -

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் 194 கோடி வசூல் செய்த நிலையில் வாரிசு திரைப்படம் 310 கோடி ரூபாய் ஈட்டியது. இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 68வது படத்திற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார். விஜய் எந்த இயக்குனரை வைத்து படம் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

இதில் கோபிசந்த், வெங்கட் பிரபு மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் போட்டியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இதில் வெங்கட் பிரபுவின் கதைக்கு நடிகர் விஜய் ஓகே சொல்லிவிட்டதாகவும் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகும் கூறப்படுகிறது.

இந்த படத்தை கோடை விடுமுறையை மையமாக வைத்து ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் தற்போது தான் முடிவு செய்யப்பட்டுள்ளார்.

மகிழ்திருமேனி படத்தில் நடிகர் அஜித் இன்னும் நடிக்கவே தொடங்கவில்லை. இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு கோடையில் தான் ரிலீஸ் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது .இதனால் மீண்டும் விஜயையும் அஜித்தும் ஒரு முறை போட்டி போட உள்ளதாக தகவல்கள் வெளியாகிவிட்டது.

Most Popular