Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் தேவர்கொண்டா- சமந்தா நடித்த குஷி எப்படி இருக்கு? அலறும் ரசிகர்கள்

விஜய் தேவர்கொண்டா- சமந்தா நடித்த குஷி எப்படி இருக்கு? அலறும் ரசிகர்கள்

2011 ஆம் ஆண்டு நெபுலா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவர் கொண்டா. திரைப்படத்தில் இவர் பெருமளவில் எந்த பிரபலத்தையும் அடையவில்லை அதற்குப் பிறகும் இவர் துவாரகா, லைஃப் இஸ் பியூட்டிஃபுல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் இத்திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவரை சினிமா அடையாளம் கண்டதென்று சொன்னால் அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் என்று திரைப்படத்தின் மூலம் தான். அதை ஆண்டில் நோட்டா, டாக்சி வாளா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் .

அதேபோல் அதே ஆண்டின் வெளிவந்த கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரமாக வைத்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை படமாக்கிய மகாநதி திரைப்படத்தின் பத்திரிகையாளராகவும் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்திருந்தார்.அதே திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தாவும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் விஜய் தேவர் கொண்டாவிற்கு ரசிகர்கள் குவிந்து கொண்டு இருந்தார்கள். அவருடைய இன்னசென்டான நடிப்பும் அவருடைய தோற்றமும் அவருக்கு சினிமாவில் நல்ல பெயரை பெற்று தந்தது

- Advertisement -

அதற்குப் பிறகு அவர் நடித்த டியர் காம்ரேட் ,வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் போன்ற திரைப்படங்கள் எல்லாம் தோல்வியை தழுவியது. அதிலும் கடைசியாக அவர் நடித்த லிக்கர் என்ற திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தது.ஆனால் இத்திரைப்படம் வெளியிட்ட பிறகு படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணத்தினால் நடிகர் விஜய் தேவர்கொண்டா தன்னுடைய அடுத்த திரைப்படத்தை பொறுப்புடன் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்த நிலையில் குஷி என்ற திரைப்படத்தில் நடித்த வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனர் சிவ நிர்வாண இயக்கத்தில் செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கும் குஷி திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவும் நடிகை சமந்தாவும் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் வெளியிட்ட அன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இத்திரைப்படத்திற்கு பாசிட்டிவ்வான ரிவியூஸ்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை சமந்தாவும் நடிகர் விஜய் தேவர் கொண்டாவும் நல்ல திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். குடும்பங்கள் கொண்டாட கூடிய வகையில் திரைப்படம் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது .

மேலும் இத்திரைப்படம் பார்த்த பலரும் விஜய் தேவர் கொண்டாவிற்கு கால் மற்றும் மெசேஜ் செய்து பாராட்டி வருவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் தேவர் கொண்டா பதிவிட்டு இருக்கிறார்.
இந்த வெற்றிக்காக நான் ஐந்து வருடம் காத்திருந்தேன் என்று கூறிய விஜய் தேவர் கொண்டா கடைசியாக நான் வெற்றி பெற்ற உணர்வு எனக்கு கிடைத்திருக்கிறது என்று ட்விட்டரில் பதிவிட்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் விஜய் தேவர் கொண்டா.

தெலுங்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஹிந்தி போன்ற பான் இந்தியன் மொழிகளை வெளியிடப்பட்டு இருக்கிறது. நடிகை சமந்தா விற்கும் விஜய் தேவர் குண்டாவிற்கும் இந்த மொழிகளில் எல்லாம் ரசிகர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அதன் காரணத்தினால் தான் இத்திரைப்படத்தின் மீது நல்ல அபிப்பிராயம் ரசிகர்களுக்கு இருக்கிறது என்றும் இது அந்த அளவிற்கு நல்ல கதைக்களம் இல்லை ஒரு சாதாரணமான திரைப்படம் தான் பொதுவாக எல்லா திரைப்படத்திலும் இருப்பது போன்று காதல் ,திருமணம் ,திருமண வாழ்வில் நிகழும் மகிழ்ச்சியும் சண்டைகளையும் தான் கதையாக்கி இருக்கிறார்கள் என்பது போன்று ஒரு சிலர் இத்திரைப்படத்தை பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கதை எதுவாக இருந்தாலும் அது கதையின் ஸ்கிரீன் பிளே நடிகர் நடிகைகளின் தத்துரூபமான நடிப்பு இவையெல்லாம் ஒரு திரைப்படம் நல்லபடியாக அமைவதற்கும் காரணமாகும். அந்த வகையில் இயக்குனர் சிவ நிறுவனா திரைப்படத்தை நன்றாக இயக்கியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்

Most Popular