Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் தேவர்கொண்டாவின் புதிய படம்.. தேசிய விருது வென்ற இயக்குனருடன் கை கோர்க்கிறார்

விஜய் தேவர்கொண்டாவின் புதிய படம்.. தேசிய விருது வென்ற இயக்குனருடன் கை கோர்க்கிறார்

2018 ஆம் ஆண்டு வெளிவந்த அர்ஜூன் ரெட்டி,  கீதா கோவிந்தம் திரைப்படத்திலிருந்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் பிரபலமானார் நடிகர் விஜய் தேவர் கொண்டா. அதற்குப் பிறகு அவர் நிறைய திரைப்படங்கள் தெலுங்கில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இவர் இந்த ஆண்டு இயக்குனர் சிவ நிர்வாண இயக்கத்தில் நடிகை சமந்தாவுடன் குஷி என்று திரைப்படம் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தேவர்கொண்டாவினுடைய 12 வது திரைப்படத்தைப் பற்றிய தகவல் தற்பொழுது வந்திருக்கிறது. vd12 என்ற திரைப்படத்தை 2019 ஆம் ஆண்டு வெளிவந்து தேசிய விருது பெற்ற ஜெஸ்ஸி என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌதம் தின்னாஓரி இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

- Advertisement -

கடைசியாக விஜய் தேவர் கொண்டா நடித்து திரையரங்குகளில் வெளிவந்த லிக்கர் என்ற திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த திரைப்படம் வெளியான பிறகு எதிர்பார்த்த அளவிற்கு எந்த திருப்தியையும் அளிக்கவில்லை.

ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளிவந்த இந்த லிக்கர் திரைப்படம் ரசிகர்களிடம் ஏமாற்றத்தையே தந்தது. குஷி திரைப்படத்தின் மீதும் ரசிகர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் காட்டவில்லை. ஆனால் ஒரு தேசிய விருது வாங்கிய இயக்குனரின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின் மீது தான் ரசிகர்களுடைய ஒட்டுமொத்த எதிர்பார்க்கும் இருக்கும்.

அப்படி எதிர்பார்ப்பதிலும் எந்தத் தவறும் இருக்காது என்றும் தோன்றுகிறது.மேலும் இந்தத் திரைப்படத்தின் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் வெள்ளிச்சந்தடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீ லீலா இந்தத் திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் .

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான பூஜை இன்று நடந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் மீது கூடுதலான எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் விதத்தில் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பது ராக்ஸ்டார் அனிருத் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

திரைப்படம் எவ்வாறு இருந்தாலும் அனிருத்தினுடைய இசை ரசிகர்களை ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தத் திரைப்படம் நடிகர் விஜய் தேவர்கொண்டாவிற்கு திருப்புமுனையாக கூட அமையலாம். இதை பயன்படுத்திக் கொண்டு சினிமா உலகில் இவர் இன்று ஒரு தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Most Popular