Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாகோடியில் புரளும் விஜய் சேதுபதி..சிவகார்த்திகேயனை முந்தினார்

கோடியில் புரளும் விஜய் சேதுபதி..சிவகார்த்திகேயனை முந்தினார்

தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகும் அதற்கு முன்பும் அவர் நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகராக வலம் வந்தார் நடிகர் விஜய் சேதுபதி. இப்படி கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி அவருடைய இதா எதார்த்தமான நடிப்பினால் பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார் .

- Advertisement -

பின்பு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அவள் சிறப்பாக நடித்து விடுவார் என்பதால் அவரை ரசிகர்கள் வில்லனாக பார்க்க ஆசை கொண்டார்கள்.

- Advertisement -

அதனால் முன்னணி கதாநாயகனாக இருந்த விஜய் சேதுபதி தற்பொழுது தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் போன்ற மிக முக்கியமான நடிகர்களுக்கு வில்லனாக மாறிவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.

ஒரு நிகழ்ச்சியில் கூட நாம் எவ்வளவு பெரிய மாஸான ஆளை எதிர்க்கிறோமோ அப்போதுதான் நாம மாசாக முடியும் என்று கூறி தான் பேட்டை திரைப்படத்தின் சூப்பர் ஸ்டாரின் வில்லன் என்பதை தெரியப்படுத்தினார். அது போல் வில்லத்தனத்தையும் மிகக் கெத்தாக நடிப்பதில் விஜய் சேதுபதி மிகச்சிறந்த நடிகர் ஆவார்.

இப்படி தமிழ் சினிமாவிலேயே வெற்றி வாகை சூடி வந்த விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இவர் ஹிந்தியில் பார்சி என்று இணைத்தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடர் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது.

இதை தொடர்ந்து தற்பொழுது இவர் மேரி கிறிஸ்துமஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் பர்சி என்ற இணை தொடர்கும் முன்பே அவர் நடித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியிடப்படும் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை தற்பொழுது நெட்பிளிக்ஸ் நிறுவனம் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.

விஜய் சேதுபதி நடித்த முதல் திரைப்படமே பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும் தற்பொழுது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயனையே வென்றிருக்கிறார். விஜய் சேதுபதி அவருடைய நடிப்பிற்கு பாலிவுட்டிலும் ரசிகர்கள் குவியத் தொடங்கி இருக்கிறார்கள்.

Most Popular