செய்திகள்

விடுதலை படத்திற்கு 8 நாள்னு சொல்லி தான் கூப்டிட்டு போனாரு! – வெற்றிமாறன் குறித்து விஜய் சேதுபதி பேச்சு

விடுதலை படத்தில் நடித்தது குறித்து தன்னுடைய அனுபவத்தை விஜய் சேதுபதி கூறியிருக்கிறார். இதில் பேசிய அவர் வட சென்னை படத்தில் நடிக்க தமக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அப்போது அதனை ஏற்றுக் கொள்ளாமல் போனதை நினைத்து இன்றுவரை தான் வருந்துவதாகும் கூறினார.தாம் நடிக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்தால் இதுவரை தான் வடசென்னை படத்தை பார்த்ததே இல்லை என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Advertisement

அதற்கு காரணம் அந்த படத்தை பார்த்து மேலும் நாம் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தம் வரும் என்பதற்காக தான் தாம் அப்படி செய்ததாக விஜய் சேதுபதி கூறினார். முதலில் விடுதலை படத்தில் நடிக்க 8 நாட்கள் தான் வெற்றிமாறன் கேட்டார். நானும் வடசென்னையில் நடிக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இதற்கு ஓகே சொன்னேன்.

அப்போது ஏதோ ஒரு காட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அந்த கிராமத்தில் எட்டு நாட்கள் என்னை நிற்க வைத்து போட்டோ மற்றும் சில காட்சிகள் எடுத்தார்கள். அந்த கிராமத்தில் ஒரு கழிவறை வசதி கூட இல்லை. எங்களுக்காக நாங்களே அங்கு கழிவறைகளை அமைத்துக் கொண்டோம்.

Advertisement

அந்த ஊரில் காக்கா கூட கிடையாது. எட்டு நாட்கள் நடித்த பிறகு தான் தெரிந்தது. அது எனக்காக நடத்தப்பட்ட ஆடிஷன் என்று. அதன் பிறகு தான் படத்தில் என்னுடைய கேரக்டர் காட்சிகளை எல்லாம் கொடுத்து பிறகு நடிக்க வைத்தார். வெற்றிமாறனிடம் வேலை பார்த்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.

ஒரு பணியை எப்படி பொறுப்பாக செய்ய வேண்டும் என்பதை வெற்றிமாறனை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். பொறுப்பாக எப்படி நடந்து கொள்வது என்பதை கற்றுக் கொடுக்க எனது குழந்தைகளை எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்று வெற்றிமாறனிடம் பேச வைத்தேன்.

எனக்கு அவ்வப்போது நினைவுகளை அசைபடுவது மிகவும் பிடிக்கும். இனி என் வாழ்நாள் இறுதியில் என் நினைவுகளில் அசைபோட்டால் அதில் நிச்சயம் வெற்றிமாறனும் உடன் இருப்பார். வெற்றிமாறனுடன் நான் பல அறிவிச்சார்ந்த விஷயங்களை விவாதித்து இருக்கிறேன்.

வெற்றிமாறன் போல் இளையராஜாவும் நன்றாக பேசுவார். அவர் பேசுவதை நீங்கள் கூர்ந்து கவனித்தால் பல அர்த்தங்கள் புரியும். இனி இளையராஜா சார் பேசினால் அவரைப் பேசி விட்டு முதலில் கவனியுங்கள் என்று விஜய் சேதுபதி கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top