Thursday, April 18, 2024
- Advertisement -
Homeசெய்திகள்லியோ திரைப்பட்த்தில் விஜய் சேதுபதி டப்பிங்? அப்போ LCU தானே

லியோ திரைப்பட்த்தில் விஜய் சேதுபதி டப்பிங்? அப்போ LCU தானே

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை பற்றிய தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகி இருக்கிறது. வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தை விரைவில் முடிப்பதற்காக படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது.

52 நாட்கள் காஷ்மீரில் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் எல் சி யூவில் இடம் பெறுமா இல்லையா என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

- Advertisement -

எல் சி யு வில் இடம்பெறும் பட்சத்தில் விக்ரம், கைதி ஆகிய படங்களில் தொடர்ச்சியாக லியோ வந்து சேரும். ஆனால் இது பற்றி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்து இருக்கிறது.

- Advertisement -

  நடிகர் விஜய் சேதுபதியை டப்பிங் செய்வதற்காக படக்குழுவினர்கள் அழைத்து இருக்கிறார்கள். ஆனால் அது எந்த மாதிரியான டப்பிங் என்பது இதுவரை புரியவில்லை.
லியோ திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களில் யாரேனும் ஒருவருக்கான பின்னணி குரலா இல்லை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்  உலகநாயகன் கமலஹாசனின் குரலில் கதையை தொடங்கினார்களே  அதுபோன்று வகையில் இருக்குமா? இல்லை விக்ரம் திரைப்படத்தின் நடிகர் கார்த்திக் குரல் மட்டும் வருவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும் அதுபோன்ற ஒரு காட்சிக்காகவா என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை.

இதனால் லியோ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. விக்ரம் திரைப்படத்தில் சூர்யா இடம்பெறுவது போல் லியோ திரைப்படத்திலும் ஏதேனும் நட்சத்திரங்கள் இடம் பெறுவார்களா என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இறந்து விடுவது போல் காட்சி இருக்கும். இதனால் இது விக்ரமுக்கு முன்பு நடைபெற்ற கதையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Most Popular