Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாவட்டி மட்டுமே 10 கோடி ரூபாய்.. ! தேசிய விருது படம் கடைசி விவசாயிக்கு வந்த...

வட்டி மட்டுமே 10 கோடி ரூபாய்.. ! தேசிய விருது படம் கடைசி விவசாயிக்கு வந்த சோதனை குறித்து விஜய் சேதுபதி வருத்தம்.. !

69வது தேசிய சினிமா விருது நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கடைசி விவசாயி மட்டுமே சிறந்த படம் பிரிவின் கீழ் விருதைத் தட்டிச் சென்று கோலிவுட் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி விவசாயி உலகெங்கும் வெளியானது. மணிகண்டன் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, தயாரித்த படம் இது.

- Advertisement -

சிம்பிளான கதையை மிகவும் அழகாக காட்டியிருந்தார் இயக்குனர் மணிகண்டன். சினிமா விமர்சகர்கள் அனைவரும் பாராட்டுகளைப் அள்ளி வீசினர். இருப்பினும் சினிமா விரும்பிகள் மட்டுமே இப்படத்திற்கு வரவேற்பு அளித்தனர். ஃபேமிலி ஆடியன்ஸ் போன்ற மற்றவர்கள் இதைக் கண்டுக்கொள்ளக் கூட இல்லை.

சில மாதங்கள் முன்பு சந்திப்பு ஒன்றில் மாணவர் ஒருவர் விஜய் சேதுபதியிடம், “ மாமன்னன், கடைசி விவசாயி படம் மிகவும் சிறப்பாக இருந்தது. அது போல படங்கள் தொடர்ந்து நடித்தால் நல்லா இருக்கும் ” எனக் கூறினார். அதற்கு அவர், “ யாரும் படத்தைப் பாரக்கவரவில்லை. காசு வரவில்லை. இரண்டுமே நல்ல படம் தான் ஆனால் மக்கள் அதை விரும்பவில்லை. ” என்றார்.

- Advertisement -

மற்றொரு நேர்காணல் ஒன்றில், “ கடைசி விவசாயி படத்திற்கு எவ்வளவு கஷ்டப்பட்டோம் என எங்களுக்குத் தான் தெரியும். ஷூட்டிங்கின் போது வட்டி மட்டுமே 10 கோடி ரூபாய் செலவு செய்த்தார் என் நண்பர் மணிகண்டன். ” என தன் வேதனையை தெரிவித்திருந்தார் விஜய் சேதுபதி.

- Advertisement -

நல்ல படத்தை ரசிக்காததால் உலகத்தர சினிமாவை எடுக்கத் தெரிந்தவர்கள் கூட தயங்குகிறார்கள் அவதிப் படுகிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் கடைசி விவசாயி. இது குறித்து இயக்குனர் எச்.வினோத் பேசியதாவது, “ துணிவு வாரிசு படங்களுக்கு 500, 1000 செலவு செய்து போகும் கூட்டம் கடைசி விவசாயி போன்ற படங்களுக்கும் வந்தால் இயக்குனர்கள் சமரசம் செய்து கொள்ளும் அளவு குறைந்த இருக்கும். எங்களின் ஸ்பேஸ் மக்களின் கையில் தான் இருக்கிறது. ”

வர்த்தக முனையில் இழப்பாக இருந்தாலும் இன்று இத்திரைப்படம் தேசிய விருது வாங்கியது இறுதியில் கலைஞன் மணிகன்டனுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியே. சிலர் கடைசி விவசாயி படத்தை பிடிக்கவில்லை கதையே இல்லை என குறை சொன்னார்கள் மற்ற சிலர் வழக்கம் போல ஓடிடியில் பார்த்துவிட்டு தியேட்டரில் பார்க்கத் தவறிவிட்டேன் என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இயக்குனர் மிஷ்கின் இப்படத்தை முதல் நாள் இரவுக் காட்சி பார்த்துவிட்டு காரில் செல்லும் போது, “ இப்படத்தைத் கொண்டாடத் தவறி விடாதீர்கள் ” என கொந்தளித்துப் பேசினார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகள் நேர்காணல்கள் பலவற்றில் அவர் நல்ல படங்களைக் கொண்டாடவில்லை என கொந்தளித்துப் பேசியுள்ளார். அவர் குறிப்பிட்ட படங்களில் கடைசி விவசாயியும் ஒன்று.

Most Popular