Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாசந்தனம் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் செல்வதற்கு முன் லோகேஷ் யாரிடம் போனார் தெரியுமா.. ?

சந்தனம் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் செல்வதற்கு முன் லோகேஷ் யாரிடம் போனார் தெரியுமா.. ?

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறிதும் குறைக்காமல் பூர்த்திப் படுத்திய திரைப்படம் விக்ரம். தன் ஆசான் கமல் ஹாசனுக்கு பல ஆண்டுகளுக்குப் பின் பிரம்மாண்ட கம்பேக் கொடுத்தார். பேன் இந்தியா திரைப்படமாக உருவான விக்ரம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

- Advertisement -

இந்தப் படத்தில் கமல் ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி மூவர் இருந்தும் இந்தக் படத்தை ஒரு படி மேல் அழைத்துச் சென்றது கிளைமாக்சில் சூர்யா செய்த ரோலக்ஸ் கதாபாத்திரமும் கைதி படத்தின் இணைப்பும் தான். விக்ரம் படத்தின் மூலம் கார்த்தியின் கைதியை இணைத்து லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கினார் லோகேஷ். இது தான் எல்.சி.யூ.

விக்ரம் படத்தில் தனித்து பயணித்து வந்த பகத் பாசில் இரண்டாம் பாதியில் நாயகன் கமல் ஹாசனுடன் இணைந்தார். அவர்களின் குழு போதை மருந்து விற்கும் விஜய் சேதுபதிக்கு எதிராக செயல்பட்டு அவரைக் கொள்வதே கதை. வில்லனாக விஜய் சேதுபதி வழக்கம் போல தன் சிறப்பைத் தந்தார். லோகேஷ் கனகராஜின் தலைமையில் மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து விக்ரமிலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தை கையில் எடுத்தார்.

- Advertisement -

தற்போது இது எல்.சியூவாக அமைந்ததால் அடுத்து வரும் படங்களிலும் விஜய் சேதுபதியின் இருப்பைக் காணலாம். விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் “ சேது அண்ணாவுக்கு திரும்ப திரும்ப ஒரே வில்லன் கதாபாத்திரத்தை கொடுக்க எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. அடுத்த முறை அவரை வேறு வழியில் பயன்படுத்த நினைத்தேன் ஆனால் இயலவில்லை. நிச்சயம் அடுத்த முறை வில்லனாக அழைக்க மாட்டேன். சாரி சேது அண்ணா. ” என நகைச்சுவையாக பேசினார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டது போல அவர் விஜய் சேதுபதி செய்த கதாபாத்திரத்தை முதலில் அவரிடம் எடுத்துச் செல்லவில்லை. முனி நான்கு பாகங்கள் மற்றும் தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் ருத்ரன் பட நாயகன் ராகவா லாரன்ஸிடமே ஸ்கிரிப்டை எடுத்துச் சென்றார் லோகேஷ். தேதிகள் இடித்ததால் லோகேஷ் கனகராஜ்க்கு கால் ஷீட் கொடுக்க முடியாத சூழலில் ராகவா லாரன்ஸ் சிக்கிக் கொண்டார்.

இந்தத் திரைப்படம் ராகவாக்கு பெரிய இழப்பு தான். கையில் கிடைத்தது தொலைத்தால் இன்னும் பிடித்தது கிடைக்கும் என்ற பாட்டின் வரிகளுக்கு இணங்க, லோகேஷ் படத்தின் வாய்ப்பு கையை விட்டுச் சென்றாலும் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் வில்லனாக செயல்பட வாய்ப்புக் கிட்டியது. அதைத் சரியாக பிடித்து தற்போது அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

Most Popular