Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஇயக்குனர் அவதாரம் எடுக்கும் விஜய் மகன்… பிஆர்ஓ-வாக அஜித் மேனேஜர் நியமனம்… ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஜய் மகன்… பிஆர்ஓ-வாக அஜித் மேனேஜர் நியமனம்… ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் தொடங்கி படிப்படியாக முன்னேறிய விஜய், இன்று ரசிகர்கள் கொண்டாடும் தளபதியாக வலம் வருகிறார். 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை விஜய் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர். இதில் தனது மகன் சஞ்சய்யை வேட்டைக்காரன் திரைப்படத்தில் அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்.

- Advertisement -

அந்தப் படத்தில் ஓப்பனிங் பாடலான “நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட” பாடலின் இறுதியில் வரும் ஜேசன் சஞ்சய், தனது தந்தைக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார். ஒரு பேட்டியில் இது குறித்து பேசிய விஜய், தான் எதிர்பார்த்ததை விட தனது மகன் நன்றாக நடனமாடியதாக கூறியிருந்தார். இதன்பிறகு வெள்ளித் திரையில் சஞ்சய் முகம் காட்டாமல் இருந்தாலும், அவருக்கு சினிமாவின் மேல் தனி ஈடுபாடு இருப்பதாகவும், இதற்காக கனடாவில் டிப்ளமோ கோர்ஸ்ஸை அவர் முடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து, லண்டனிலும் திரைக்கதையை எழுதுவது தொடர்பான படிப்பை மேற்கொண்டார் விஜய் மகன் சஞ்சய். இந்த நிலையில் பட்டப்படிப்பை முடித்த அவர், குறும்படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அத்தனையும் உண்மை என்பதை உணர்த்தும் வகையில், லைகா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 23 வயதான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய கதை புதுமையாக இருந்ததால் தங்களுக்கு பிடித்திருப்பதாகவும், இந்த படத்தை தாங்கள் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

- Advertisement -

விஜயின் கத்தி திரைப்படத்தின் மூலம் திரைப்படங்களை தயாரிப்பதில் நுழைந்த லைகா நிறுவனம், தொடர்ந்து முன்னணி ஹீரோ படங்களை எடுத்து வருகிறது. ரஜினியுடன் தர்பார், பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களை தயாரித்த இந்த நிறுவனம், அஜித்தின் விடாமுயற்சி படத்தையும் எடுக்க உள்ளது. இந்த நிலையில், லைகா நிறுவனத்துடன் தனது முதல் படத்தை இருப்பதால் உற்சாகமடைந்துள்ள ஜேசன் சஞ்சய், தனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிப்பதற்கான நடிகை நடிகைகள் தேர்வு குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், திரையுலகில் உச்சத்தில் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களை இதில் பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், ஜேசன் சஞ்சய் திரைப்படத்திற்கு பிஆர்ஓவாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் தொடர்பான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular