சினிமா

மாஸ்டர் படத்தைப் போல தளபதி 67லும் மது சம்மந்தப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்… !

Lokesh Kanagaraj and Thalapathy Vijay 67

விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 ஷூட்டிங் ஏற்கனவே துவங்கி முதல் அட்டவணை கூட முடிந்துவிட்டது. அடுத்ததாக 25 நாட்கள் காஷ்மீரில் ஷூட்டிங் படம்பிடிக்க உள்ளனர். இதற்கு முன் சென்ற மாதம் படத்தின் அறிவிப்பு வீடியோவை ஷூட் செய்தனர், அந்த அப்டேட்டைத் தான் விஜய் ரசிகர்கள் காண வெறியாக இருக்கின்றனர். நேற்று தயாரிப்பாளர் லலித் குமார், “ அது 10 நாட்களில் உங்களை வந்து சேரும். ” என சூடான தகவலும் தந்துவிட்டார்.

தளபதி விஜய்யுடன் இப்படத்தில் பெரிய பெரிய ஜாம்பவான் நடிக்கின்றனர். இதுவரை சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் ஒப்பந்தமாகிருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களோடு விக்ரம் நடிக்க மறுத்த மற்றும் விஷால் நடிக்க வேண்டியதாக இருந்த கதாபாத்திரத்தை அர்ஜுன் செய்கிறார்.

2 மாதங்களுக்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘ தி ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் ’ படத்தின் உரிமத்தை பெற்று அதை தளபதி 67க்காக பயன்படுத்துகிறார் எனவும் முழு ரீமேக்காக இல்லாமல் அதற்கு சில எழுத்தாளர்களை வைத்து புது திரைக்கதை தயாரிப்பதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால் இதுவரை அது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. இருப்பினும் தகுந்த வட்டாரங்களில் அது உண்மை தான் எந்தின்றனர்.

அந்த ஹாலிவுட் படத்தில் முன்னாள் கேங்ஸ்டராக வலம் வந்த கதாநாயகன் அதையெல்லாம் தூக்கி எறிந்து குடும்பத்துடன் வேறொரு ஊரில் வாசிப்பார். பல ஆண்டுகள் கழித்து அவரை பழிவாங்க அவரது அண்ணன் மீண்டு வருவதும், அதை அவர் சமாளித்து பிழைப்பதும் தான் மீதி கதை. இப்படத்தில் கதாநாயகன் ஹோட்டல் உரிமையாளராக வருவார். தற்போது அதே போல் தளபதி 67ல் நடிகர் விஜய் ஓர் பாரில் மது விற்பவராக நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் விஜய்க்கு 50+ வயது மற்றும் அவருக்கு மகளாக பிக் பாஸ் ஜனனி நடிக்கிறார்.

அதனால் நிச்சயம் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் சாயலில் ஓர் அதிரடி கேங்ஸ்டர் படம் எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் அனைவரது எதிர்பார்ப்பையும் நிச்சயம் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது. மாஸ்டர் படத்தைப் போல இதிலும் விஜய்யின் கதாபாத்திரம் மது சம்மந்தப்பட்டதாக இருக்கிறது. மாஸ்டரில் ஓர் புத்தம் புதிய விஜய்யைக் காட்டிய லோகேஷ் இங்கும் அதைச் செய்வார், பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top