Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்க்கு சிறந்த நடிகர் விருது.. சர்வதேச அளவில் கிடைத்த கெளரவம்.. விவரம்

விஜய்க்கு சிறந்த நடிகர் விருது.. சர்வதேச அளவில் கிடைத்த கெளரவம்.. விவரம்

நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாஸ் மசாலா படங்களில் நடித்து வரும் விஜய் விருதுகளில் இதுவரை பெரிய கவனத்தை செலுத்தியதில்லை. பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் ரசிகர்களுக்காக தொடர்ந்து நடிகர் விஜய் படம் நடித்து வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவை காப்பாற்றிய மாஸ்டர் திரைப்படத்திற்கு தற்போது விருது கிடைத்திருக்கிறது. ஜப்பானில் உள்ள ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது கிடைத்திருக்கிறது. அதில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே நடிகர் விஜய் மெர்சல் திரைப்படத்தில் நடித்ததற்காக இங்கிலாந்தில் ஐ ஏ ஆர் ஏ என்ற விருதை விஜய் வாங்கினார். இந்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் அவருக்கு இரண்டாவது விருது கிடைத்திருக்கிறது. இதனை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

அதேபோன்று சிறந்த நடிகைக்கான விருது தலைவி படத்தில் நடித்த கங்கணா ரனாவத்துக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது மாநாடு திரைப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கும், சிறந்த படத்திற்கான விருது சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது பார் ரஞ்சித்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைக்கதை காண விருது மாநாடு திரைப்படத்திற்காக வெங்கட் பிரபுவுக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது ஜெய் பீம் படத்தில் நடித்ததற்காக மணிகண்டனுக்கும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது டாக்டர் படத்தில் நடித்த ரெட் இன் கிங்ஸ்லிக்கும், சிறந்த வில்லனுக்கான விருது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது மாநாடு படத்தில் பணியாற்றிய பிரவீன்க்கும்  சிறந்த நடன ஆசிரியருக்கான விருது மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு பணியாற்றிய தினேஷ் குமாருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று விமர்சன ரீதியில் சிறந்த படமாக மண்டேலா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Most Popular