செய்திகள்

சினிமா பிரபலங்கள் வீட்டில் தொடரும் கொள்ளை.. யேசுதாஸ் மகன் வீட்டில் இவ்வளவு நகை திருட்டா?

பிரபல பின்னணி பாடகர் ஏசுதாஸ் மகனான விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 பவுன் நகை திருடப்பட்டுள்ளதாக அவரது மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சமீப காலமாக சினிமா நட்சத்திரங்கள் வீட்டில் அடிக்கடி கொள்ளை நிகழ்கிறது.

Advertisement

நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் முதலில் 60 பவுன் தங்கம் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 200 சவரன் காணவில்லை என்ற புதிய புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மற்றொரு திரைப்பட பிரபலமான விஜய் ஏசுதாஸ் வீட்டில் நகை திருடப்பட்டு இருக்கிறது.

Advertisement

இது குறித்து யேசுதாஸ் மருமகள் தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் திரைப்படப் பிரபலங்களை குறி வைத்து இது போன்ற திருட்டு சம்பவம் நடைபெறுகிறதா இல்லை? வீட்டில் பணிபுரியும் வேலையாட்களே திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்களா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

மேலும் திரைப்படப் பிரபலங்கள் எந்த அளவிற்கு அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. திரை பிரபலங்கள் எப்போதும் தங்களது பணிக்காக வீட்டின் வெளியே இருப்பதால் வீட்டில் என்ன நடக்கிறது வீட்டில் நமது வைத்திருக்கும் பொருட்கள் இருக்கிறதா என்பதை கூட பார்க்க முடியாமல் இருக்கிறார்கள்.

மேலும் நகை அதிகப்படியாக இருந்தால் அதனை பேங்க் லாக்கரில் வைத்து பாதுகாப்பது மிகவும் சிறந்தது. எனினும் ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும்போது அடிக்கடி பேங்க் லாக்கருக்கு பிரபலங்கள் செல்ல முடியாது என்ற காரணத்தினால் வீட்டில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் கூட பழகிய ஆட்களே இதுபோன்று திருட்டு சம்பவங்களை ஈடுபடுவது கோலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.இன்னும் வேறு எந்தெந்த நட்சத்திரங்கள் வீட்டில் எவ்வளவு கொள்ளை போயிருக்கிறது என்பது இனிமேல் தான் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top