Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய், சூர்யாவிற்கு உதவிய விஜயகாந்த் எப்படி தெரியுமா ?

விஜய், சூர்யாவிற்கு உதவிய விஜயகாந்த் எப்படி தெரியுமா ?

நடிகர் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்குமே சோகத்தை அளிக்கிறது. நீண்ட நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவர் தற்பொழுது மரணத்திருப்பதை ஏற்றுக்கொள்ள மனம் சற்று தயங்குகிறது.

- Advertisement -

80களில் சிறந்த நடிகராக இருந்த நடிகர் விஜயகாந்த். தற்பொழுது முன்னணியில் இருக்கும் நடிகர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கிறார் .அவர்கள் யார் அது எந்த உதவி என்பதை இப்பொழுது பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நட்சத்திரங்களாக இருந்து கலக்கி வரும் நடிகர் தளபதி விஜய் மற்றும் சூர்யாவிற்கு நடிகர் விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் உதவி இருக்கிறார்.

- Advertisement -

தொடக்கத்தில் விஜய் சூர்யா இருவருமே நிறைய திரைப்படங்கள் கதாநாயகர்களாக நடித்து வந்து கொண்டிருந்தார்கள். அதில் பெரும்பாலான திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை .

- Advertisement -

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் நடித்த திரைப்படங்கள் அவர்களை அடையாளம் கூட காட்டவில்லை ஆனால், விஜயகாந்துடன் இணைந்து நடித்த திரைப்படங்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கென்று ஒரு அங்கீகாரம் சினிமாவில் கிடைத்தது.

தளபதி விஜய் நடிகர் விஜயகாந்த் உடன் செந்தூரப்பாண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகராக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திலிருந்து தான் தளபதி விஜய்க்கு என்று ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது

.அந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்தின் கதாபாத்திரம் இரண்டாம் பகுதியில் இருந்து தான் தொடங்கும் ஆனால் ,ரசிகர்கள் விஜயகாந்திற்காக திரைப்படத்தை பார்க்க வந்த பொழுது தளபதி விஜய்க்கும் ரசிகர் ஆகிவிட்டார்கள்.

அதேபோல் நடிகர் சூர்யா பெரியண்ணா என்ற திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் நடித்திருந்தார் .இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரத்திலும் முக்கியத்துவம் இருக்கும். இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் சூர்யாவிற்கும் ரசிகர்கள் கூவிய தொடங்கினார்கள் இதுவெல்லாம் இவர்களை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டிக் கொடுத்த திரைப்படங்கள் ஆகும்.

எந்த ஒரு பெரிய நடிகனும் தன்னுடன் இணையாக ஒரு நடிகரை நடிக்க வைத்து உயர்த்திட எளிதில் ஒப்புக்கொள்வது இல்லை. அதையும் மிக சுலபமாக செய்தார் நடிகர் விஜயகாந்த் .

அதே போல் மறைந்த நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் ஒரு சிறிய பகுதியில் நடிகர் விஜயகாந்த் நடித்திருப்பார்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி திரைப்படம் வந்தபோதெல்லாம் நடிகர் விஜயகாந்த் முன்னணி நடிகரின் பட்டியலில் இருந்த காலம் அது .அந்த சமயத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் விவேக்கிற்காக அதில் ஒப்புக்கொண்டார். தன்னலமற்ற நடிகர் தான் நடிகர் விஜயகாந்த். இதுவெல்லாம் அவர் மரணித்த இந்த சமயத்தில் நம்மை நினைத்துப் பார்க்க வைக்கிறது.

Most Popular