Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாமுன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக்கின் டிவீட்டுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள விஷ்ணு விஷால்.. !

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக்கின் டிவீட்டுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள விஷ்ணு விஷால்.. !

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் திரையுலக ஹீரோக்களில் ஒருவர். ராட்சான், ஜீவா, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் மூலம் கவனத்தை ஈர்த்தவர். லெஜன்ட் கிரிக்கெட் வீரர் விரேந்தர் ஷேவாக்கின் டுவீட்டுக்கு விஷ்ணு விஷால் இன்று டிவிட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இந்த மாதம் 18 முதல் 22 வரை நடக்கவுள்ள பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் மசோதா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி இந்தியா என்ற நமது நாட்டின் பெயரை பாரத் என மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்கு சிலர் வரவேற்புக் மற்ற சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் இதற்கு பெரிதும் ஆதரவு அளித்துள்ளார். அவர் இது குறித்து பதிவிட்ட டுவீட்டில், “ நாட்டின் பெயர் நமக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். இந்தியா எனும் பெயரை ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். நம்முடைய உண்மையான பெயரை பெறுவதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. ” என்றார்.

- Advertisement -

இதற்கு விஷ்ணு விஷால் சரியான பதிலடி கொடுத்துள்ளார். ஷேவாக்கின் இந்த பதிவிற்கு அவர், “ ஏன் சார் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா ? “ எனத் திருப்பிக் கேட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் பார்வையில் இருந்து பார்த்தால் அவர் கேட்பது சரியாக தென்படுகிறது.

- Advertisement -

இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அது தான் உண்மையான பெருமை என ஷேவாக் கூறுவது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. அப்படிப் பார்த்தால் அவர் இத்தனை ஆண்டுகள் இந்தியா ஜெர்சி அணிந்து கிரிக்கெட் ஆடியது பெருமையை வழங்கவில்லையா ? ஷேவாக் கூற வந்ததை அறை குறையாக கொட்டியதால் அவரின் பதிவை பலர் அடிக்கின்றனர்.

Most Popular