சினிமா

“ ப்ளூ சட்டை மாறனை எறங்கி செய்யணும் ” கெளதம் மேனனின் ஆவேசப் பேச்சுக்கு சாதியை வைத்து பதிலடி கொடுத்துள்ள மாறன்

GVM Blue sattai maran clash

தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக திரை விமர்சனம் செய்து கொண்டிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். இவரது விமர்சனங்கள் அடுத்தவரை காயப்படுத்தும் விதத்தில் அமைவது மாறாத ஒன்று. முன்னணி நடிகர்கள் அஜித்குமார், சிம்பு ஆகியோரை உருவ கேலி செய்தும் இருக்கிறார். ரசிகர்கள் பலரது வன்மத்தை இந்த ப்ளூ சட்டை மாறன் சேகரித்துள்ளார். நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தனமான விமர்சனம் செய்து யூடியூப்பில் சம்பாதிக்கிறார்.

சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் விமர்சன வீடியோவில் வழக்கம் போல படத்தை மட்டம் தட்டி பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் இதைப் பற்றி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்னிடம் கேட்ட போது அவர், “ ப்ளூ சட்டை விமர்சனைத்தைப் பார்க்கையில் அளவில்லா வெறுப்பு வருகிறது. அவரை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் இளக்காரமாக செய்ய வேண்டாம் எனத் தான் கூறுகிறேன். முன்னணி இயக்குனர் யாரும் இதைப் பற்றி பேச மாட்டார்கள். நீங்கள் கேட்பதால் கூறுகிறேன். களத்தில் இறங்கி அவரை எதாவது செய்ய வேண்டுமென்ற அளவிற்கு கோபம் வருகிறது.” என்றார்.

Advertisement

பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை யாராவது பகைத்துக் கொண்டால் உடனவே அவர்களை பற்றி தன் சமூக வலைதளத்தில் அசிங்கப்படுத்த ஆரம்பித்ததுவிடுவார். இரவின் நிழல் படத்தின் போது இவருக்கும் இயக்குனர் பார்திபனுக்கும் இடையே தாறுமாறான சண்டை/வாக்குவாதம் நடைபெற்றது. பல விமர்சன வீடியோக்களின் இறுதியில் பார்திபனைப் பற்றி கிழித்து தள்ளியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அந்தப் பிரச்சனை முடிவடைந்தது.

Advertisement

தற்போது கெளதம் வாசுதேவ் மேனனின் பேச்சுக்கு தன் பக்கத்தில் இருந்து பதிலடி கொடுத்துள்ளார். சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில் சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தான் என அவரை தாக்க ஆரம்பித்து விட்டார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைகிளி முத்துச்சரம் என முதல் நான்கு படங்களில் இயக்கிவர் கெளதம் என குறிப்பிட்ட அவர் அதன் பின்னர் வாரணம் ஆயிரம் படம் முதல் தன் சாதியை இணைத்து முழு பெயரையும் போடுகிறார். பணம், புகழ் வந்த பின் சாதியை இணைத்து காட்டுகிறாரா என ஒருவர் அந்த பதிவிற்கு ரிப்ளை செய்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top