சினிமா

“ 1990ல ஒரு போட்டியாளர் வந்தார்… ” தளபதி விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ! ரஞ்சிதமே ஸ்டைலில் கிஸ் கொடுத்து செல்ஃபி !

Vijay varisu audio launch speech

பொங்கல் திருவிழாவை சிறப்புக்கவிருக்கும் வாரிசு திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் சிறப்பாக நிறைவடைந்தது. தங்கள் தளபதியைக் சுனாமி பேரலை போல ரசிகர்கள் திகழ்ந்திருந்தனர். எப்போதும் ஆடியோ லான்ச்சில் விஜய் தன் ரசிகர்களுக்காக அழகாக பேசி பாசிட்டிவிட்டியை பரப்புவார். இம்முறையும் அதே போல் தான் பேசினார், கூடுதலாக சில சிறப்பான காட்சிகளும் அடங்கின.

சரத்குமார், பிரகாஷ்ராஜ், தமன், தயாரிப்பாளர் தில் ராஜு என அவைவரும் பேசியப் பின் ரசிகர்களின் ஒளி எகிறியது. யாரைக் கான வந்தார்களோ அவர் மேடைப்படியை ஏறி கையசைக்க ‘ தளபதி தளபதி ’ என்ற ஒளி உச்சத்தைத் தொட்டது. கையில் மைக்கைக் கொடுத்தவுடன் தன் ஸ்டைலில் ரசிகர்கள் விரும்பிய படியே “ என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே ! ” என தன் பேச்சை ஆரமித்தார்.

Advertisement

கூடியிருந்த ரசிகர்களுக்கு பிளியிங் கிஸ் கொடுத்து விழாவின் கியூட்டான தருணத்தை உருவாக்கினார். பின் “ உங்க எல்லாருக்கும் முத்தம் கொடுக்க ஒரு ஸ்டைல் மாட்டிக்கிச்சு. இனிமே இதுதான். ” என்றார் தளபதி விஜய். ரஞ்சிதமே பாட்டில் ராஷ்மிக்காவை நோக்கி இதே ஸ்டைலில் முத்தம் கொடுத்தார் விஜய். அதையே இங்கும் செய்துள்ளார்.

விஜய்யின் குட்டி ஸ்டோரி

“ 1990களில் ஒரு போட்டியாளர் வந்தார். நான் எங்கு சென்றாலும் வந்தார். நான் அவரை வெல்ல முயற்சித்தேன். அவர் பெயர் ஜோசப் விஜய். எப்போதும் உங்களையே உங்கள் போட்டியாளராக பாருங்கள். தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்பும் தான் என்னை ஓட வைத்திருக்கிறது ” என ரசிகர்களுக்கு தன் குட்டி ஸ்டோரி மூலம் அறிவுரை வழங்கினார்.

உதவி செய்யும் ரசிகர்களை பாராட்டிப் பேசினார் விஜய். “ கிட்டத்தட்ட 6000 பேர் பதிவு செஞ்சு அதுல 2000 பேர் மேல இரத்த தானம் செஞ்சி இருக்கீங்க. ரொம்ப நல்லது. இந்த உலகத்துல இரத்ததுக்கு தான் ஜாதி மதம்னு எந்த வேறுபாடும் இல்ல. ” என்றார்.

கடைசியாக தன் மொபைலை எடுத்து ரசிகர்களை கவர் செய்தது செல்ஃபி வீடியோ எடுத்து தன் மெனேஜர் ஜெகதீசனை ‘ என் நெஞ்சில் குடியிருக்கும் ’ எனும் ஹாஸ்டாகில் அப்லோட் செய்யச் சொன்னார். ரஞ்சிதமே கிஸ்ஸை விட இது தான் மிகவும் அழகான தருணம். ரசிகர்கள் பலர் இதுதான் தளபதியின் சிறந்த ஆடியோ லான்ச் என பெரிதாக மதிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top