சினிமா

வாரிசு திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் எங்களுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை – விர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஓட்டோ நிறுவனம்

கடந்த ஜூன் 22 ஆம் தேதி இளையதளபதி விஜய் பிறந்தநாளில் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் தேர்ட் லுக் வெளியானது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடி திரைப்படமாக இத்திரைப்படம் தயாராகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் இயக்குனர் வம்சி இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் விஜய்-க்கு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

சர்ச்சைக்குள்ளான ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தளபதி விஜய் ஒரு நாற்காலியில் கோட் சூட் போட்டு கம்பீரமாக அமர்ந்து இருப்பார். அந்த புகைப்படத்தை எடுத்து அதில் துல்கர் சல்மான் முகத்தை போட்டு ஓட்டோ நிறுவனத்தின் லோகோவை பதித்து ரசிகர் ஒருவர் எடிட் செய்தார்.

இந்த இரு புகைப்படத்தையும் ஒப்பிட்டு நிறைய மீம்ஸ்கள் வந்தது. ஒரு சிலர் வாரிசு திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் காப்பியடித்து எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கிண்டலடித்தனர். அதற்கு ஓட்டோ நிறுவனம் முறையான விளக்கத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தது.

அசல் தன்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். வாரிசு திரைப்பட பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை எடுத்து யாரோ ஒருவர் எடிட் செய்திருக்கிறார். பொழுதுபோக்குக்காக இதை அவர் செய்திருக்கிறார் மற்றபடி அந்த புகைப்படத்தில் இருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று ஓட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் விஜய் நடிப்பில் அடுத்த வருட பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் வாரிசு திரைப்படம் வெற்றிபெற ஓட்டோ நிறுவனம் சார்பாக வாழ்த்தும் தெரிவித்து உள்ளது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top