Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாதல அஜித்தின் மச்சான் யார் யாரெல்லாம் காதலிச்சு இருக்காரு பாருங்க

தல அஜித்தின் மச்சான் யார் யாரெல்லாம் காதலிச்சு இருக்காரு பாருங்க

நடிகை ஷாலினியின் சகோதரர் நடிகர் ரிச்சர்ட் ரிஷி. இவர் திரௌபதி ,ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் இவர் நடித்த திரைப்படங்களின் மூலம் இவர் அந்த அளவிற்கு பிரபலம் அடையவில்லை. இவரும் நடிகை ஷாலினி மற்றும் அவரின் தங்கை ஷாமிலியை போன்று குழந்தை நட்சத்திரமாகவே தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கி விட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட போன்ற மொழிகளில் நிறைய திரைப்படங்களை நடித்து இருக்கிறார் .

கடந்த 2023 இல் இவர் சில நொடிகளில் என்ற திரைப்படத்தை நடித்திருந்தார். இது கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது ஆனால் ,அந்த அளவிற்கு இந்த திரைப்படமும் இவருக்கு எந்த வரவேற்பையும் பெற்றுத் தரவில்லை.

- Advertisement -

ஆனால் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் உடன் காதல் வயப்பட்டு இருப்பதாக காசிப் வெளிவந்தது. இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது போன்ற நிறைய புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்று யாஷிகா ஆனந்த்தின் தாய் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ஷகிலா ஒரு பெட்டியில் ரிச்சர்ட் ருசியை பற்றி ஒரு செய்தியை கூறியிருக்கிறார். குக் வித் கோமாளிக்கு பிறகு நடிகை சகிலாவிடம் பலரும் பேட்டி எடுத்து வருகிறார்கள். அவர் வாழ்க்கை சம்பவங்களை பகிர்ந்து கொண்டு வரும் சகிலா தற்பொழுது ஒரு புதிய செய்தியை கூறி இருக்கிறார்.

கவர்ச்சி நடிகை ஆக மலையாள சினிமா விற்கு அறிமுகமான நடிகை ஷகிலா சினிமாவை விட்டு விலகிவிட்டார். அவரிடம் உங்கள் வாழ்வில் நடந்த காதல் அனுபவத்தை பற்றி கூறுங்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் வாழ்வில் கடந்து வந்த காதல்களைப் பற்றி கூறியிருந்தார்

அதில் தன்னுடைய 15 வது வயதில் ரிச்சர்ட் ரிஷி உடன் காதல் வயப்பட்டதாக நடிகை சகிலா கூறி இருந்தார். மேலும் ஷகிலாவை காதலித்ததாகவும் வரும் காலத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் பேசி இருக்கிறோம் ஆனால், கடந்த காலங்கள் நான் திருமணம் செய்து கொள்வதற்கு ஏற்றவாறு அமையவில்லை. அதனால் அப்படியே போக்கிவிட்டது என்று நடிகை சகிலா மீது இருந்த காதலை தற்பொழுது வெளிப்படையாக கூறுகிறார்.

Most Popular