Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாமாமன்னன் போஸ்ட்ரில் உதயநிதி பெயர் என் கடைசியில் வந்தது.. படக்குழு விளக்கம்

மாமன்னன் போஸ்ட்ரில் உதயநிதி பெயர் என் கடைசியில் வந்தது.. படக்குழு விளக்கம்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு பகத் பாசில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் மாமன்னன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார்.இதனால் இந்த படம் மீது தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடைசி திரைப்படமாக இருக்கும் என்று பல பேட்டிகளில் அவரை கூறி இருக்கிறார். தாம் மீண்டும் நடிக்க வந்தால் அது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படம் இம்மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்காக படத்தை புரமோஷன் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அப்போது மாமன்னன் பட போஸ்டரில் உதயநிதி ஸ்டாலின் பெயர் ஏன் கடைசியாக இடம்பெற்றிருக்கிறது.

- Advertisement -

காரணம் என்ன?

இதில் ஏதேனும் காரணம் இருக்கிறதா? இல்லை தன்னடக்கம் தான் காரணமா என்று நெறியாளர் கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த மாரி செல்வராஜ் தம் படத்தின் போஸ்டரை தயார் செய்து விட்டேன்.

- Advertisement -

அப்போது உதயநிதி எனக்கு போன் செய்து போஸ்டரை தயார் செய்து விட்டீர்களா எனக்கு காட்ட முடியுமா என்று கேட்டார். நானும் அதற்கு அனுப்பினேன். அப்போது உதயநிதி ஸ்டாலின் பெயர்தான் முதலில் இருந்தது.அதன் பிறகு பகத் பாஸில் பெயர் அதன் பிறகு வடிவேலு கீர்த்தி சுரேஷ் ஆகியவர்களின் பெயர்கள் இருந்தது.

உதயநதி விளக்கம்

இதனைப் பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை. வடிவேலும் மிகப்பெரிய கலைஞர் என்பதால் அவர்களுடைய பெயர்தான் முதலில் இருக்க வேண்டும் என்றும் பகத் பாஸில் தம்மை விட பெரிய நடிகர் என்பதால் அவருடைய பெயர் இரண்டாவதாகவும்

கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கிய மகா நடிகை என்பதால் அவருடைய பெயர் மூன்றாவதாகவும் இது என்னுடைய கடைசி படம் என்பதால் என் பெயர் கடைசியாக இருக்கட்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியதாக மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் படத்தின் நடிகர்களின் செயல்பாடுகளையும் எப்படி நடித்தார்கள் என்பதை வைத்து இந்த இடம் வழங்கப்பட்டதாகவும், சரியாக நடிக்க மாட்டேன் என்பதால் என்னுடைய பெயர் கடைசியில் வைக்க இருப்பதாகவும் உதயநிதி கூறினார். அப்போது கீர்த்தி சுரேஷ் உதயநிதியை தட்டிக் கொடுத்து இதற்குப் பெயர் தான் பணிவு என்று கூறினார்.

Most Popular