செய்திகள்

துணிவு திரைப்படத்தை பார்த்து வங்கி கொள்ளை முயற்சி – இளைஞர் கைது

தமிழகத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை வெளியான அஜித் படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை துணிவு படைக்க உள்ளது. துணிவு திரைப்படம் பேசியது என்னவோ வங்கியில் நடைபெறும் மோசடிகளை தான்.

ஆனால் அதனை வங்கிக் கொள்ள முயற்சி போல் படத்தை எடுத்து ஹச் வினோத் டிவிஸ்ட் வைத்திருந்தார். ஆனால் நமது இளைஞர்கள் துணிவு படத்தை பார்த்துவிட்டு உண்மையிலேயே வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் திண்டுக்கல் தான் நடந்திருக்கிறது. திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது.

அப்போது வங்கிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அங்கு இருந்த ஊழியர்களை கட்டி போட்டு கொள்ளை அடிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் தப்பி வெளியே வந்து சத்தம் போட்டு இருக்கிறார். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வங்கிக்குள் புகுந்து கொள்ளையனுக்கு  தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் துணிவு படத்தை பார்த்து விட்டு நான் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். துணிவு திரைப்படத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அத்தனையும் காதில் வாங்காமல் வெறும் வங்கிக் கொள்ளையை திட்டம் போட்டு போலீசாரிடம் சிக்கி இருக்கிறார்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்திற்கும் கேளிக்கும் உண்டாக்கி இருக்கிறது.

பலரும் இதனை இணையதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு விஜய் ரசிகர்களும் துணிவு திரைப்படத்தை கிண்டல் செய்து வருகின்றனர். வலிமை திரைப்படத்தின் போது வட இந்தியர்களை குறிக்கும் ஒரு வசனம் இடம் பெற்றதற்கு போலீசார் ஒருவர் இயக்குனர் வினோத்தை எச்சரித்ததாக அவர் பேட்டி ஒன்றில் கூறிய நிலையில், தற்போது வங்கி கொள்ளை அவர் படத்தை பார்த்து செய்தேன் என்று  இளைஞர் கூறி இருப்ப சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top