Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஆஹா வலிமை வாடை அடிக்குதே.. ! தளபதி 68 முதல் பாடல் அப்டேட் கொடுத்துள்ள யுவன்.....

ஆஹா வலிமை வாடை அடிக்குதே.. ! தளபதி 68 முதல் பாடல் அப்டேட் கொடுத்துள்ள யுவன்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. !

கோலிவுட் சாம்ராஜ்யத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் இளைய தளபதி விஜய். இரண்டாவது முறையாக அவர் லோகேஷ் கனகராஜிடன் இணைந்து செய்துள்ள லியோ படத்திற்கான எதிர்பார்ப்பை வார்த்தைகளால் அடக்கிவிட இயலாது. ஜனவரி மாதம் துவங்கிய இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஜூலையில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

- Advertisement -

தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் லோகேஷ் கனகராஜ் & கோ தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. ஒவ்வொரு படத்தின் முடிவுக்குப் பின்பும் விஜய் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் ஈடுபடுவார். லியோ படத்திற்கு பின்னர் அவர் நார்வேயில் சில வாரங்கள் ஓய்வு பெற்று அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார்.

லியோ படம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். ஓய்வுக்குப் பின் வீடு திரும்பியுள்ள விஜய் உடனே படக்குழுவுடன் தளபதி 68 படத்திற்கான முன் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

- Advertisement -

தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 படத்திற்காக இந்தியாவில் யாரும் செய்யாத ஒன்றை செய்வதற்காக புறப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களில் விஜய்யின் இரண்டு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெங்கட் பிரபு பதிவிட்டார். அதில் விஜய் தன் ரசிகர்களைப் போல ஆங்கிலப் படம் ஈகுவலைசருக்கு ஃபேன் பாய் மொமாட்டை காட்டியப் புகைப்படம் வைரல் ஆனது.

- Advertisement -

தளபதி 68 முதல் பாடல்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு யுவன் ஷங்கர் ராஜாவிடம் தளபதி 68 பணிகள் எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது என செய்தியாளர் கேட்க அதற்கு அவர், “ இன்னும் தொடங்கவில்லை, இனிமேல் தான். ” என பதிலளித்து விட்டு நகர்ந்தார். தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அப்டேட்டை யுவன் வழங்கியுள்ளார்.

தளபதி 68 படத்தின் முதல் பாடல் தர லோக்கல் குத்துப் பாடலாக இருக்கும் எனக் கூறியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. பொதுவாக பெரிய ஸ்டார் படங்களில் ரசிகர்களுக்காக இது போன்ற ஒரு பாடல் இடம்பெறுவது வழக்கம் தான். ஒரு பக்கம் ரசிகர்கள் இதைக் கொண்டாட மறுபக்கம் சிலர் களாய்க்கின்றனர்.

இதே போல தான் யுவன் தல அஜித்தின் வலிமை படத்திற்கும் சொன்னார். “ சும்மா செய்றோம் ” என பிலிம் காட்டிவிட்டு நாங்க வேற மாறி என்ற பாடலை கொடுத்தார். விஜய்க்கும் அவ்வாறு நடந்துவிடுமோ என கேலி செய்கிறார்கள் நெட்டிஸ்ன்கள். விஜய் தன் கேரியரில் 2வது முறை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்துள்ளார். பெரிய ஸ்டார்கள் முதல் ஆள் தெரியாத ஹீரோ வரை அனைவருக்கும் சிறந்ததை கொடுத்துள்ளார் யுவன். அதனால் அவரது இசை நிச்சயம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Most Popular