Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமா7G ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் எடுக்கும் செல்வராகவன்

7G ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் எடுக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமாவில் இளைஞர்களை தன்னுடைய திரைக்கதையாலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டும் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் இயக்குனர் செல்வராகவன். இதில் அவர் எடுத்த செவன் ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படம் ரசிகர்களும் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

அந்த காலத்து இளைஞர்களை இந்த படம் பைத்தியம் பிடிக்க வைத்தது. இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அமைத்த ஒவ்வொன்று பாடலும்  அப்போதைய இளைஞர்களின் தேசிய கீதமாக இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தற்போது செவன் ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தற்போது இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் திரை கதையை எழுதி முடித்தவுடன் ஷூட்டிங் தொடங்கி விடுவதாகும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிப்பதற்காக ஹீரோ ரவி கிருஷ்ணா தனது உடல் எடையை குறைத்து இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை நடிகர் தனுஷை வைத்து செல்வராகவன் இயக்க இருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென்று யாருமே எதிர்பாராத வகையில் செவன் ஜி ரெயின்போ காலனி தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது செல்வராகவன்  ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. செல்வராகவனும் தற்போது நடிப்பிலே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். பாகாசுரன் படத்தில் அவர் நடித்ததையே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போது அவர் மார்க் ஆண்டனி என்று விஷாலுடன் படத்தில் நடித்து வருகிறார்.இதனால்,  அவர் மீண்டும் இயக்குனராக திரும்புகிறார் என்கின்ற செய்தியை ரசிகர்கள் கேட்டால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.

Most Popular